“குருதிச் சோகையை நிவர்த்தி செய்தல்” என்ற தொனிப் பொருளில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் கண்காட்சி..

ஆசிரியர் - Editor I
“குருதிச் சோகையை நிவர்த்தி செய்தல்” என்ற தொனிப் பொருளில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் கண்காட்சி..

யாழ்.அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் “குருதிச் சோகையை நிவர்த்தி செய்தல்” என்ற தொனிப் பொருளிலான கண்காட்சி இன்று நடத்தப்பட்டிருக்கின்றது. 

குறைந்த செலவில் எமது பிரதேசத்தில் கிடைக்கக்கூடிய இலை வகைகள் மற்றும் காய்கறிகளுடன் போசாக்கினை அதிகரிப்பது தொடர்பான 

குறித்த கண்காட்சியினை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை ஆகியன இணைந்து நடாத்தின. 

இக் கண்காட்சியில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போஷாக்கை மேம்படுத்துவதற்காக 

போஷாக்கு உணவு கண்காட்சியும் முன்னெடுக்கப்பட்டது. இதில் இலகுவாக இயற்கையாக கிடைக்கக்கூடிய இலை வகை மற்றும் காய்கறி வகை கொண்டு 

பாரம்பரியமான உணவு தயாரித்து வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் வீடுகளில் இவ்வாறு போசாக்கினை மேம்படுத்துவதற்கு 

உணவினைத் தயாரிப்பது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி

மற்றும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி, அதிகாரி நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி, அச்சுவேலி வைத்திய அதிகாரி மற்றும் வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள் 

சுகாதார பரிசோகர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு