உடைக்க.. உடைக்க.. ஆதிலிங்கேஷ்வரர் உயர்ந்து கொண்டேயிருப்பார்! ஆலய அறங்காவலர்கள் ஆவேசம்..

ஆசிரியர் - Editor I
உடைக்க.. உடைக்க.. ஆதிலிங்கேஷ்வரர் உயர்ந்து கொண்டேயிருப்பார்! ஆலய அறங்காவலர்கள் ஆவேசம்..

இந்து சமயத்தவர்களுக்கு தொல்லை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட தொல்லியல் திணைக்களமும், அதனோடு சேர்ந்து வெடுக்குநாறி ஆதி சிவனை அழிக்க நினைத்தால் அது நடக்காது அழிக்க அழிக்க சிவன் பிரகாசிப்பான் என வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர ஆலய அறங்காவலர் பூபாலசிங்கம் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்தில் இந்து சமயம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளுக்கான விரைவான தீர்வுகளை எட்டுதல் என்னும் தொனிப் பொருளில் இடம்பெற்ற சமயத் தலைவர்கள் ஒன்று கூடிய கலந்துரையாடலிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் இன்று நேற்று தோன்றியவர் அல்ல. நாயக்கர் காலத்து நாக வழிபாட்டுடன் கூடிய ஆதி லிங்கேஸ்வரப் பெருமான் அருள் பாலிக்கும் இடமாக வெடுக்குநாரி மலை விளங்குகிறது.

இலங்கையில் உருவாக்கப்பட்ட தொல்லியல் திணைக்களம் இந்து சமயத்தை அழிக்க உருவாக்கப்பட்ட தொழியல் திணைக்களமாகவே கருதுகிறேன். 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எமது ஆலயத்தை தொல்லியல் திணைக்களம் வனவிலங்கு திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து எமது வழிபாட்டு உரிமையை பல்வேறு வழிகளிலும் தடை செய்தது.

அதன் வெளிப்பாடாகவே அண்மையில் ஆதி சிவனையும் பிள்ளையாரையும், அம்மனையும் தூக்கி எறிந்தார்கள். ஆதி சிவனின் வரலாற்றை அறியாதவர்கள் செய்த மிலேச்சத்தனமான செயற்பாடு காரணமாக ஆதிலிங்கேஸ்வரரின் அருளினால் ஒரு அடி உயரத்தில் இருந்த ஆதிலிங்கம் தற்போது மூன்று அடி ஆதிலிங்கமாகப் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

ஆதிலிங்கேஷ்வரர் பெருமானுடன் சேர்த்து பிள்ளையார் அம்மன் சிலைகளும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12 மணி தொடக்கம் 3 மணி வரை உள்ள சுப நேரத்தில்பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. நான் யாருக்கும் பயப்பட போவதில்லை சிவனின் அருளினால் நடந்த அநியாயங்களை உரத்துக் கூறிவருகிறேன்.  

கடத்தப்பட்டாலும் பயப்படபோவதில்லை. ஆகவே நாம் ஆதி சிவனை பிரதிஷ்டை செய்யப்போகும் நன்னாளில் அனைவரும் அணிதிரண்டு ஆதிலிங்க பெருமானை தரிசிக்க வருவதோடு மீண்டும் யாராவது உடைப்பார்கள் ஆனால் ஆதி சிவன் 10 அடி உயரமாக வளர்ச்சி அடைந்து அருள் பாலிப்பார் என அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு