தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்ய ராகுல் முடிவு!! -காங்கிரஸ் கட்சியின் முக்கிய சட்ட ஆலோசகர்கள் அவசரமாக கூடி ஆராய்வு-

ஆசிரியர் - Editor II
தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்ய ராகுல் முடிவு!! -காங்கிரஸ் கட்சியின் முக்கிய சட்ட ஆலோசகர்கள் அவசரமாக கூடி ஆராய்வு-

இந்தியாவின் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட உள்ள மேன்முறையீட்டு மனு காங்கிரஸ் கட்சியின் முக்கிய சட்ட ஆலோசகர்களால் தயார் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி சமூகத்தினரை அவமதித்ததாக சூரத் நீதிமன்றத்தில்  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழங்கில் அவருக்கு இரண்டு வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வசதியாக அவரின் தண்டனை காலம் ஒர மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பினால் அவர் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் குறித்த விவகாரத்தை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

மேலும் சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்ய ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதன்பேரில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட உள்ள மேன்முறையீட்டு மனு காங்கிரஸ் கட்சியின் முக்கிய சட்ட ஆலோசகர்களால் தயார் செய்யப்பட்டுள்ளது. 

சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ஓரிரு நாளில் குறித்த மனு தாக்கல் செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு