யாழ்.வடமராட்சி கிழக்கிலிருந்து கடற்றொழிலுக்கு செல்ல கடற்படை அனுமதி கட்டாயம்! உள் வீட்டுச் சண்டையால் மீண்டும்........

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கிலிருந்து கடற்றொழிலுக்கு செல்ல கடற்படை அனுமதி கட்டாயம்! உள் வீட்டுச் சண்டையால் மீண்டும்........

யாழ்.வடமராட்சி கிழக்கில் கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அப்பகுதியில் உள்ள கடற்படைக் காவலரன்கள் ஊடாக உரிய அனுமதிகளை காண்பித்து கடத்தொழிலில் ஈடுபட வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண கடற்படை தளபதிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

நேற்று புதன்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட சட்டம் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலிலே குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத சுருக்கு வலை தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில் கடற்படையோ மாவட்ட கடற்டத்தொழில் நீரியல்வளத் திணைக்களமோ 

உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என வருகை தந்த மீனவ அமைப்புகளால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. மேலும் சட்டவிரோத சுருக்கு வலைத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு 

நூறு மீட்டர் தூரத்தில் கடற்படை முகாம் இருக்கின்ற நிலையில் கடற்படையால் அவர்களை கட்டுப்படுத்த முடியாதது ஏன்? என கேள்வி எழுப்பினர். நாங்கள் அறிந்த வரையில் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு கடற்படை இலஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டும் நிலையில் 

நீரியல் வளத் திணைக்களமும் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுபவர்களை கைது செய்வதில் அலட்சியமாக உள்ளது. கடற் தொழிலை நம்பி இருக்கும் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் சட்ட விரோத சுருக்குவலை தொழிலில் ஈடுபடுபவர்களால் தமது வாழ்வாதாரமே பறிபோகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நீங்கள் அமைச்சராக இருக்கும்போதே வாழ்வாதாரமின்றி மீனவ குடும்பங்கள் செத்துப் போகும் நிலையை நீங்கள் பார்க்கப் போகிறீர்களா என அமைச்சர் முன் மீனவர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையில் வடமராட்சி கிழக்கிலிருந்து கடற்படையை வெளியேற்றி இராணுவத்தை பாதுகாப்புக்கு அனுமதியுங்கள் என கோஷம் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து மீனவ அமைப்புக்களை சமாதனப்படுத்திய அமைச்சர் டக்ளஸ், 

 வடமராட்சி கிழக்கில் கடற்படை அனுமதி பெற்று மீன் பிடிக்கும் முறைமையை மக்களின் கோரிக்கைக்கு அமையவே தளர்த்தினோம். ஆனால் இன்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் நிலை வந்துள்ள காரணத்தினால் இதனை ஒரு பகுதியினூடாக ஒழுங்குபடுத்த வேண்டும்.

ஆகவே இன்று வியாழக்கிழமையிலிருந்து வடமராட்சி கிழக்கில் உள்ள அனைத்து மீனவத் தொழிலாளர்களும் கடலுக்குச் செல்லும்போது அப்பகுதியில் உள்ள கடற்படை முகாம்களில் உரிய அனுமதிகளை காண்பித்து கடலுக்குச் செல்ல வேண்டும் என பணிப்புரை விடுத்தார்.

இந்த நடைமுறையையில் சாதக பாதங்களை அறியும் வரை குறித்த செயற்பாட்டை பின்பற்றுமாறு அமைச்சர் பணிபுரை விடுத்ததோடு வடமராட்சி கிழக்கில் உள்ள சமாசங்கள் சங்கங்களுடன் கலந்துரையாடி அப்பகுதி ஊடாக செல்ல வேண்டும் என்பதை கடற்படையினருக்கு பெயர்களை வழங்குமாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் வடமாகாண கடற்படை தளபதி, வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், 551 பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி, பிரதேச செயலாளர்கள் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பு அதிகாரிகள், 

மற்றும் திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு