SuperTopAds

550 குழந்தைகளின் தந்தை!! -விந்தணு தானம் செய்தவர் மீது வழக்குப்பதிவு-

ஆசிரியர் - Editor II
550 குழந்தைகளின் தந்தை!! -விந்தணு தானம் செய்தவர் மீது வழக்குப்பதிவு-

நெதர்லாந்து நாட்டில் விந்தணு தானம் செய்த ஒருவர் சுமார் 550 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ள நிலையில், சகோதர முறை கொண்ட அவர்கள் தற்செயலாக உறவில் ஈடுபடும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்பதால், அந்த நபர் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்.

அந்நாட்டின் ஹேக் நகரைச் சேர்ந்த 41 வயதான ஜொனாதன் ஜேக்கப் மெய்ஜர் (Jonathan Jacob Meijer) தனது விந்தணுவை குறைந்தது 13 சிகிச்சை நிலையங்களுக்கு தானம் செய்துள்ளார், அவற்றில் 11 நெதர்லாந்தில் உள்ளன.

இசைக்கலைஞரான ஜொனாதன் தற்போது கென்யாவில் வசிக்கிறார், மேலும் அவரது உயிரியல் குழந்தைகளில் ஒருவரின் தாய் (நெதர்லாந்தை சேர்ந்தவர்) மற்றும் 25 குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் DonorKind அறக்கட்டளையால் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

டச்சு வழிகாட்டுதல்களின்படி, விந்தணு தானம் செய்பவர்கள் 12 பெண்களுக்கு மேல் தானம் செய்யக்கூடாது அல்லது 25 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கக்கூடாது.

தங்களுக்கு நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் இருப்பதை அறிந்தால் அவர்களுக்கு அது ஒரு தொந்தரவாக மாறிவிடக்கூடாது என்பதற்காவதும், அந்த உடன்பிறப்புகளுக்கு இடையே தற்செயலான உறவு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் மற்றும் உளவியல் சிக்கல்களைத் தடுக்கவும் இவ்வாறு செய்யப்படுகிறது.

ஜொனாதன் ஜேக்கப் மெய்ஜர் அதிகமான பெண்களுக்கு விந்தணுக்களை தானம் செய்வதைத் தடுக்க டோனர்கைண்ட் அறக்கட்டளை அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர் இதுவரை நன்கொடை வழங்கிய சிகிச்சை நிலையங்கள் குறித்து அது அறிய விரும்புகிறது, மேலும் அவரது தானம் செய்யப்பட்ட விந்தணுக்கள் அனைத்தும் தாய்க்காக ஒதுக்கப்படாவிட்டால் அழிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

அரசாங்கம் எதுவும் செய்யாததால் இந்த மனிதருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறோம். அவர் இணையம் வழியாக உலகளாவிய அணுகலைக் கொண்டுள்ளார் மற்றும் அவர் பாரிய, சர்வதேச விந்தணு வங்கிகளுடன் வணிகம் செய்கிறார் என்று DonorKind அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ஜொனாதன் நெதர்லாந்தில் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார், ஆனால் உக்ரைன் மற்றும் டென்மார்க் உள்ளிட்ட பிற நாடுகளில் விந்தணுக்களை தானம் செய்துள்ளார் என்று டோனர்கைண்ட் கூறியது.

ஜொனாதன் சமூக ஊடகங்கள் மூலம் வீட்டில் கருவூட்டல் (home insemination) செய்ய தேடும் பெற்றோரை அணுகியதாகவும், அவரது நடவடிக்கைகளை நிறுத்தவில்லை என்றும் அறக்கட்டளை குற்றம் சாட்டியுள்ளது.

தெரிந்திருந்தால்., அவரை தேர்வு செய்திருக்க மாட்டேன்

ஜொனாதன் மீது வழக்குத் தொடுத்திருக்கும் தாய் ஈவா, அவர் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையாக இருக்கிறார் என்று தெரிந்திருந்தால், அவரை ஒருபோதும் தேர்வு செய்திருக்க மாட்டார் என்று கூறினார். அவர் மேலும் கூறினார், இது என் குழந்தைக்கு ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி நான் நினைத்தால், என் வயிற்றில் எதோ செய்கிறது என்று கூறியுள்ளார்.