தாம் விசேட அதிரடிப்படையினர் என கூறி சிவில் உடையில் மதுபோதையில் வந்த இருவர் பொதுமக்கள் மீது தாக்குதல்! இருவர் வைத்தியசாலையில் அனுமதி...

ஆசிரியர் - Editor I
தாம் விசேட அதிரடிப்படையினர் என கூறி சிவில் உடையில் மதுபோதையில் வந்த இருவர் பொதுமக்கள் மீது தாக்குதல்! இருவர் வைத்தியசாலையில் அனுமதி...

சிவில் உடையுடன் நிறைபோதையில் வந்த இருவர் தங்களை விசேட அதிரடிப்படையினர் என கூறி தாக்கியதில் இரு பொதுமகன்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விஞ்ஞானகுளம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சச்சிதானந்தன் சதாநந்தன், மரையடித்தகுளம், செங்கராத்திமோட்டைப் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய சிற்றம்பலம் கேதீஸ்வரன் ஆகிய இருவரே வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா – மரையடித்தகுளம், செங்கராத்திமோட்டை பகுதியில் தமது காணியை துப்பரவு செய்துவிட்டு வீடு திரும்பியபோது மதுபோதையில் சிவில் உடையில் வந்த விசேட அதிரடிப்படையினர் தங்களை தாக்கியதாகவும், ஊர்மக்கள் ஒன்றுகூடியதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர் எனவும்பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

ம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாகவும், தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு