யாழ். வயா­வி­ளான் பகு­திக்கு அந்­தப் பகுதி மக்­களை மட்­டும் செல்­லு­மாறு அறிவுறுத்தல்!

ஆசிரியர் - Admin
யாழ். வயா­வி­ளான் பகு­திக்கு அந்­தப் பகுதி மக்­களை மட்­டும் செல்­லு­மாறு அறிவுறுத்தல்!

யாழ்ப்­பா­ணத்­தில் இரா­ணு­வத்தால் அண்­மை­யில் விடு­விக்­கப்­பட்ட வலி­.வ­டக்கு வயா­வி­ளான் பகு­திக்கு அந்­தப் பகுதி மக்­களை மட்­டும் செல்­லு­மாறு அச்­சு­வேலி பொலி­ஸார் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர்.

இலங்கை இரா­ணு­வத்­தின் கட்­டுப்­பாட்­டில் 27 வரு­டங்­க­ளாக இருந்த வயா­வி­ளான் பகுதி கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் மக்­க­ளி­டம் கைய­ளிக்­கப்­பட்­டது.

அங்கு, பெரும்­பா­லான இடங்­க­ளில் ‘காணி உரி­மை­யா­ளர்­கள் மட்­டும் உள்ளே செல்­லுங்­கள்’ என்ற வாச­கங்­கள் எழு­திய பதாகைகள் பொலிஸாரால் அங்கு தொங்­க­வி­டப்­பட்­டுள்­ளன.

வேறு நபர்கள் இந்தப் பகுதிக்குள் நுழைந்தால் தேவையற்ற காணிப் பிணக்குகள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். எனவே செல்ல வேண்டாம் என பொலிஸாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதே­வேளை அப்­ப­கு­தி­க­ளில் வெடி­பொ­ருள்­களை கண்­டால், கலோ ட்ரஸ்ட் நிறு­வ­னம் 021222 3779 என்ற இலக்­கத்­துக்­கும், பிராந்­திய மிதி­வெடி செயற்­பாட்டு அலு­வ­ல­கம் 0212 285415 என்ற இலக்­கத்­துக்­கும் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தி உட­ன­டி­யாக அறி­விக்­கு­மா­றும் கோரப்­பட்­டுள்­ளமை குறிப்பி டத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு