தன் தந்தை யார் என்பதில் சந்தேகம்? -27 வயதில் டி.என்.ஏ பரிசோதனை செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி முடிவு-
இளவயது பெண் ஒருவருக்கு, பலவருடங்களாகவே தான் தன் தந்தையைப் போலவோ, அல்லது தன்னுடைய சகோதரங்களைப் போலவோ இல்லை என்னும் எண்ணம் மனதை உறுத்திக்கொண்டே இருந்துள்ளது.
இந்நிலையில் அவர் 27ஆவது வயதில் உண்மையை அறிந்துகொள்வதற்காக டி.என்.ஏ பரிசோதனை செய்துகொண்டார்.
அப் பரிசோதனையின் முடிவுகள் குடும்பத்தையே சிதறடிக்கும் அளவுக்கு பயங்கரமாக இருந்தன.
அதாவது 70 வயதாகும் தன் தந்தை, இத்தனை வருடங்களாக தன்னை அன்புடன் நேசித்த தன் தந்தை, உண்மையில் தன் தந்தை இல்லை என டி.என்.ஏ பரிசோதனையில் தெரியவரவே, கடும் அதிர்ச்சிக்குள்ளானார் அந்த இளம்பெண்.
தான் சிறுமியாக இருக்கும்போது, தன் தாய்க்கும் வேறொருவருக்கும் தவறான உறவு இருப்பதாக அரசல் புரசலாக கேள்விப்பட்டிருந்தார் அந்தப் பெண்.
அத்துடன், தான் மட்டும் தன் தந்தையைப் போலவோ, தன் அக்காக்களைப்போலவோ இல்லை என்னும் விடயத்தையும் நன்கறிந்திருந்ததால், தனது 27ஆவது வயதில் டி.என்.ஏ பரிசோதனை செய்துகொண்டார் அவர்.
அவர் பயந்ததுபோலவே, தன்னை வளர்த்தவர் தன் தந்தை இல்லை என்று கூறின டி.என்.ஏ பரிசோதனையின் முடிவுகள். இதனை அவரின் தாயாரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.