ராகுலின் எம்.பி பதவி பறிப்பிற்கு எதிர்ப்பு!! -நாடு முழுவதும் போராட்டம் நடாத்த தயாராகும் காங்கிரஸ் கட்சி-

ஆசிரியர் - Editor II
ராகுலின் எம்.பி பதவி பறிப்பிற்கு எதிர்ப்பு!! -நாடு முழுவதும் போராட்டம் நடாத்த தயாராகும் காங்கிரஸ் கட்சி-

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி, நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது.

'ஜனநாயகத்தை காப்பாற்றுவோம்' என்ற இயக்கத்தினூடாக இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு நேற்று மாலை இடம்பெற்ற காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவதூறு ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், 30 நாள் பிணை வழங்கிய சூரத் நீதிமன்றம், மேன்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு