லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழர்!! -நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு-
லண்டனில் உள்ள ப்ரெண்ட் பகுதியை சேர்ந்த தமிழர் ஒருவர் சிறுமி துஸ்பிரயோக வழக்கில் சிக்கி, குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில், அவருக்கான தண்டனை எதிர்வரும் ஜூன் மாதம் அறிவிக்கப்பட உள்ளது.
ப்ரெண்ட் பகுதியில் குடியிருக்கும் 61 வயது சுப்ரமணியம் சதானந்தன் என்பவரே சிறுமி துஸ்பிரயோக வழக்கில் சிக்கி தண்டனையை எதிர்கொள்கிறார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார் நம்பிக்கையை பெற்ற பின்னர், அவர்களின் குடியிருப்புகளில் வைத்தே சதானந்தன் அத்துமீறியதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சம்பவம் நடக்கும் போது 12 வயதேயான அந்த சிறுமியிடம், தமக்கு தொழில் ரீதியான தரவுகளை தயார் செய்ய உதவும்படி கேட்ட சதானந்தன், அவருடன் தனியாக கணினி இருக்கும் அறைக்கு சென்று, அந்த வாய்ப்பை துஸ்பிரயோகத்திற்கு பயன்படுத்தியுள்ளார்.
மட்டுமின்றி, இந்த சம்பவம் நமக்குள் ரகசியமாக இருக்கட்டும் எனவும், வேறு எவரும் தெரிந்துகொள்ள வேண்டாம் எனவும் அந்த சிறுமியை அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
சதானந்தன் அந்த சிறுமியை தொடர்ந்து பல நாட்கள் துன்புறுத்தியும் வந்துள்ளார். மட்டுமின்றி, விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி குறித்த சிறுமியை தமது தேவைக்கு பயன்படுத்தியுள்ளார் என நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் பல வருடங்களுக்கு பின்னர், குறித்த சிறுமி, கல்வி நிமித்தம் பல்கலைக்கழகம் சென்ற பின்னர், தமக்கு நேர்ந்த துயரத்தை முதன்முறையாக குடும்பத்தினரிடம் வெளிப்படையாக கூறியுள்ளார்.
இந்த நிலையில், சதானந்தனால் பாதிக்கப்பட்ட இன்னொருவரும் தமது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். சம்பவம் நடக்கும் போது அந்த நபருக்கு 9 இல் இருந்து 13 வயதிருக்கும் எனவும், குடியிருப்பில் எவரும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே சதானந்தன் தம்மிடம் அத்துமீறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு விவகாரங்களும் பொலிசாருக்கு புகாராக தெரிவிக்கப்பட்ட நிலையில், 2019 மே 10 ஆம் திகதி சதானந்தன் கைது செய்யப்பட்டார். ஆனால் அப்படியான தவறுகள் தமது பக்கத்தில் இருந்து நடக்கவில்லை என சதானந்தன் மறுத்துள்ளார்.
இருப்பினும் விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டு, அவர் மீதான 10 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளது.