முல்லைத்தீவு வட்டுவாகல், நந்திக்கடல் வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டிற்குள், 5000 மீனவா்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை..
முல்லைத்தீவு- வட்டுவாகல், நந்திக்கடல் பகுதியை வன ஜீவராசிகள் திணைக்களத்திற்குரிய பகுதியாக அறிவித்து வர்த்தமான அறிவித்தல் வெளியாகியிருக்கும் நிலையில், வட்டுவாகல், நந்திக்கடலை அடிப்படை வாழ்வாதாரத்திற்காக நம்பியிருக்கும் சுமார் 5 ஆயிரம் மீனவர்க ளுடைய வாழ்வாதாரம் பறிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
மேற்கண்டவாறு வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறியுள்ளார். இவ்விடயம் தொடர் பாக மேலும் அவர் கூறுகையில், வட்டுவாகல், நந்திக்கடலில் கடற்றொழில் செய்யும் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மேற்படி 5 ஆயிரம் மீனவர்களுடைய வாழ்வாதாரம் வட்டுவாகல், நந்திக்கடலில் தங்கியிருக்கின்றது. இந்நி
லையில், மேற்படி வட்டுவாகல், நந்திக்கடல் பகுதிகளை வன ஜீவராசிகள் திணைக்களம் தம து ஆளுகை;குள் கொண்டுவரும் வகையில் வர்த்தமான அறிவித்தல் ஒன்றை 2017ம் ஆண்டு தை மாதம் 24ம் திகதி வெளியிட்டிருக்கின்றது. இந்த வர்த்தமானி அறிவித்தல் இதுவரையும் மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அம்
பலமாகியிருக்கின்றது. ஏற்கனவே வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டபாய கடற்ப டைமுகாமிற்காக மக்களுடைய காணிகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த மக்க ளுடைய வாழ்வாதாரத்தையும் பறிப்பதற்கு பாரிய சதி திட்டம் தீட்டப்பட்டிருக்கின்றது. இந்த விடயம் மீனவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
இதனால் எமது மீனவர்கள் வறுமைப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் எதிர்காலத் தில் நிச்சயமாக உருவாகப்போகின்றது. இந்நிலையில் மேற்படி விடயம் தொடர்பாக 25ம் திக தி முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும், 26ம் திகதி வடமாகாணசபை யிலும் கூறி எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை
தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.