பெண்களுடன் ஆபாசம்!! -தலைமறைவான பாதிரியார் கைது-

ஆசிரியர் - Editor II
பெண்களுடன் ஆபாசம்!! -தலைமறைவான பாதிரியார் கைது-

தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி மதபோதகர் (பாதிரியார்) பெனடிக் ஆன்டோ இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். 

குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த பெனடிக்ட் ஆன்டோ (வயது 29) என்பவர் அம்மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான தேவாலயத்தில் மதபோதகராக (பாதிரியார்) பணியாற்றினார். 

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தின. அதாவது பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் அவரது ஆபாச வீடியோ, புகைப்படம், வாட்ஸ்-அப் சாட்டிங் பதிவுகள் பரவின. 

தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பாதிரியார் ஆன்டோ ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. இதனிடையே, கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்திற்கு வரும் பெண்களுடன் வீடியோவில் ஆபாச செயலில் ஈடுபட்டு, பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் ஆன்டோ மீது இளம்பெண் முறைப்பாடு செய்தார்.

 முறைப்பாட்டை அடுத்து பாதிரியார் ஆன்டோ தலைமறைவானார். இந்நிலையில், தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக் ஆன்டோவை பொலிஸார் இன்று கைது செய்தனர். 

நாகர்கோவிலில் பண்ணைவீட்டில் தலைமறைவாக இருந்த பெனடிக் ஆன்டோவை தனிப்படை பொலிஸார் இன்று கைது செய்தனர்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு