உள்ளாடையை கழற்றி வேலியில் போடும் பெண்கள்!! -விசித்திரமான சுற்றுலா தளம்-

ஆசிரியர் - Editor II
உள்ளாடையை கழற்றி வேலியில் போடும் பெண்கள்!! -விசித்திரமான சுற்றுலா தளம்-

நியூசிலாந்து நாட்டில் உள்ள சுற்றுலா தளம் ஒன்றில், பெண்கள் தங்கள் மேல் உள்ளாடையை கழற்றி அங்குள்ள வேலிகளில் வீசுவதை வழக்கமாக வைத்திருப்பது வியக்க வைத்துள்ளது.

குறித்த நாட்டின் கார்ட்ரோனா (cardrona) என்ற பகுதியில் உள்ள சுற்றுலா தளத்திலேயே இவ்வாறான சம்பவம் பதிவாகியுள்ளது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள வேலிகளில் ஆயிரக்கணக்கான பெண்களின் மேல் உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டு இருப்பதால் இந்த பகுதியை மக்கள் ”கார்ட்ரோனா பிரா வேலி” என்றும் அழைக்கின்றனர்.

அந்நாட்டின் இணையதளம் ஒன்றில் கிடைத்துள்ள தகவலின்படி, 1998 கிறிஸ்துமஸ் மற்றும் 1999 புத்தாண்டுக்கு இடைப்பட்ட நாட்களில் இங்குள்ள வேலியில் 4 பிராக்கள் தொடங்கவிடப்பட்டு இருந்த நிலையில், இவை பல்வேறு விவாதங்களை அப்போது ஏற்படுத்தி இருந்தது.

இருப்பினும் பெப்ரவரி மாதத்தில் குறித்த உள்ளாடைகளின் எண்ணிக்கை இங்கு 60 ஆவதாக அதிகரித்தது, பின் நாட்கள் செல்ல செல்ல இது ஆயிரக்கணக்கில் பெருகி கொண்டே வருவதாக இணையதளம் தெரிவித்துள்ளது.

வேலியில் எதற்காக பிராக்கள் தொங்க விடப்படுகின்றன என்பதற்கு பல்வேறு கதைகளும், காரணங்களும் சொல்லப்படுகின்றன.

ஆனால் அதற்கான உண்மையான காரணம் யாருக்கும் உறுதியாக தெரியவில்லை, சொல்லப்போனால் காலத்திற்கு ஏற்ப இதன் காரணங்கள் மாறி மாறி சொல்லப்படுகிறது.

முதலாவதாக சில பெண்கள் தங்களது சுதந்திரத்தை பிரகடனப்படுத்துவதற்காக பிராக்களை கழற்றி வேலியில் தொங்க விடுவதை புகைப்படமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

சிலர், பெண்களின் மார்பக புற்றுநோய் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது.

அதற்கேற்ப இந்த பகுதியில் பெண்களின் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக நிவாரணமும் பெறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு