முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா கைது! வவுனியா மேல் நீதிமன்ற உத்தரவுக்கமைய..

ஆசிரியர் - Editor I
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா கைது! வவுனியா மேல் நீதிமன்ற உத்தரவுக்கமைய..

உடல்நல குறைவினால் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருந்தது.

வவுனியா - செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பான வழக்கின் சாட்சி ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக 

வவுனியா மேல்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. அதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அருகில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது. 

விபத்தில் ரங்காவின் மெய்ப்பாதுகாவலராக செயற்ப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு வவுனியா மேல்நீதிமன்றில் இடம்பெற்று வந்ததுடன், ரங்கா உட்பட குறித்த காலப்பகுதியில் கடமையாற்றிய உயர் பொலிஸ் அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கின் சாட்சி ஒருவர் அச்சுறுத்தப்பட்டமை மற்றும் விபத்து தொடர்பான விசாரணைக்காக 

ஶ்ரீரங்கா ஆஜராகாமை ஆகிய விடயங்களை கருத்தில் கொண்டு அவரை கைது செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ள நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு