தென்மராட்சி மிருசுவிலில் ஆயுத முனையில் வயோதிப தம்பதிகளை அச்சுறுதி கொள்ளை..

ஆசிரியர் - Editor I
தென்மராட்சி மிருசுவிலில் ஆயுத முனையில் வயோதிப தம்பதிகளை அச்சுறுதி கொள்ளை..

மிருசுவில் படித்த மகளிர் திட்டம் பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்களை கொடூரமான முறையில் தாக்கிவிட்டு அங்கிருந்த நகை, பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொளையடித்து சென்றுள்ளனர்.

வாள், கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்த 5 ற்கும் மேற்ப்பட்டவர்களினாலே இக் கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை நடந்த இச் சம்பவத்தில் 5 இலட்சத்திற்கும் அதிகமான உடமைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கொடிகாமம் போலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- 

மிருசுவில் ஆசைப்பிள்ளையேத்தம் படித்த மகளிர் திட்டத்தில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் வந்த கொள்ளையர்கள் வீட்டின் ஜன்னலை களட்டி வீட்டிற்க்குள் புகுந்துள்ளனர்.

உட்புகுந்தவர்கள் அங்கு தூங்கிக் கொண்டிருந்த வீட்டு உரிமையாளரை போர்வையால் சுற்றி கட்டி சிவருடன் செந்த்து தாக்கியுள்ளனர். 

இதன் பின்னர் அறைக்குள் உறங்கிக் கொண்டிருந்த இரு பெண்களை வாள் மற்றும் கத்தி என்பவற்றை காட்டி அச்சிறுத்தி அவர்கள் அணிந்திருந்த சங்கிலி, காப்பு, மோதிரம், தோடு என்பவற்றை அபகரித்துள்ளனர்.

தொடர்ந்து வீட்டிற்க்குள் சல்லடை போட்டு தேடுதல் நடத்திய கொள்ளையர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்களையும் 30 ஆயிரம் ரூபா பணத்தினையும் கொளையிட்டுள்ளனர்.

வீட்டிற்குள் சல்லடை போட்டு தேடுதல் நடத்தி கொள்ளையிட்ட அவர்கள் அங்கிருந்து தப்பி செல்லும் போது தங்களை பின் தொடர்ந்து செல்லாதவாறு வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிலின் பிளக்கையும் பிடுங்கி சென்றுள்ளனர்.

இது தவிர வீட்டிற்க்குள் இருந்த தொலைபேசிகளையும் அபகரித்து சென்ற கொள்ளையர்கள் தொலை பேசிகளை அயல் வீட்டு வளாகத்திற்குள் எறிந்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் அயலவர்களின் துணையுடன் கொள்ளையர்களின் தாக்குதலிக்கு இலக்காகி தலையில் காயமடைந்தவர் மீட்க்கப்பட்டு சாவகச்சேரி ஆதர வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் வந்த கொடிகாமம் போலிசார் கைரேகை உள்ளிட்ட தடையங்களை பதிவு செய்ததுடன், விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு