எந்நேரமும் தூங்கும் மனைவி!! -பொலிஸ் நிலையம் சென்ற கணவர்-

ஆசிரியர் - Editor II
எந்நேரமும் தூங்கும் மனைவி!! -பொலிஸ் நிலையம் சென்ற கணவர்-

இந்தியாவின் பெங்களூருவில் கணவர் ஒருவர், தனது மனைவி எந்நேரமும் உறங்கி கொண்டே இருந்து, தன்னை துன்புறுத்துவதாக பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக கணவர் கம்ரான் கான், கௌசர் பசவனகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து மனைவி ஆயிஷா பர்ஹின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாமனார் அரிபுல்லா மற்றும் மாமியார் ஹீனா மீது கம்ரான் கான் முறைப்பாடு செய்துள்ளார்.

மாலை 5.30 மணியில் இருந்து இரவு 9.30 மணி வரை மனைவி ஆயிஷா தூங்குவதாகவும், பின் இரவு உணவுக்கு பின் மீண்டும் தூங்கும் மனைவி ஆயிஷா அடுத்த நாள் மதியம் 12.30 மணிக்கு தான் எழும்புவதாக கணவர் கம்ரான் கான் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் வீட்டில் எந்த வேலையும் அவள் செய்வது இல்லை என்றும், தன்னுடைய அம்மா தான் சமைப்பது முதல் சுத்தம் செய்வது வரை பார்க்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 5 ஆண்டுகளாக இதையே மனைவி ஆயிஷா செய்து வருவதாக கம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு