தென்பகுதி மீனவா்களை தம்மிடம் தருமாறுகோாி அடாவடி செய்த பொலிஸாா் மூக்குடைபட்டு வெளியேற்றப்பட்டனா்..

ஆசிரியர் - Editor I
தென்பகுதி மீனவா்களை தம்மிடம் தருமாறுகோாி அடாவடி செய்த பொலிஸாா் மூக்குடைபட்டு வெளியேற்றப்பட்டனா்..

யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து சட்டத்திற்கு மாற hக இரவில் கடலட்டை பிடித்துக் கொண்டிருந்தபோது கட்டைக்காடு மீனவர்களால் சிறைப்பிடி க்கப்பட்ட தென்பகுதி மீனவர்களை தம்மிடம் தருமாறுகோரி பொலிஸார் அடாவடி புரிந்த நிலையில்,  மாகாணசபை உறுப்பினர்களின் முயற்சியினால் பொலிஸார் வெளியேற்றப்பட்டனர். 

வடமராட்சி கிழக்கு பகுதியில் தென்பகுதி மீனவர்கள் அடாத்தாக நுழைந்து வாடிகளை அமைத்து தங்கியுள்ளதுடன், இரவு நேரங்களில் கடலட்டை பிடிக்ககூடாது. என்ற சட்டத்தை மீறி தொடர்ச்சியாக இரவு நேரங்களில் கடலட்டை பிடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (20) இரவு வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் தென்பகுதி மீனவர்கள் கடலட்டை பிடித்துள்ளனர். 

இதனை அவதானித்த கட்டைக்காடு மீனவர்கள் கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த 8 தென்பகுதி மீனவர்களையும், 3 படகுகளையும் சிறைப்பிடித்தனர். இந்நிலையில் இன்று(21) காலை கட்டைக்காடு கிராமத்திற்குச் சென்ற பளைப் பிரதேச பொலிஸார் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளையும், மீனவர்களையும்  தம்மிடம் ஒப்படைக்கும்படி கேட்டு மக்களை கடுமையாக மிரட்டியுள்ளனர். 

மேலும் கட்டைக்காடு மீனவர்களை கைது செய்யப்போவதாகவும் கூறி அடாவடி புரிந்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வடமாகாணசபை உறுப்பினர்களான ச.சுகிர்தன் மற்றும் கே.சயந்தன் ஆகியோர் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கi ள பொலிஸாரிடம் ஒப்படைக்க முடியாது என கூறியிருந்ததுடன், ஒப்படைக்கப்பட்டால் அவர்களுக்கு என்ன தண்டணை வழங்குவீர்கள் எனவும் கேட்டிருந்தனர். 

அதற்கு பதிலளித்த பொலிஸார் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை ஒப்படைத்தே ஆகவேண்டும். இல்லையேல் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தியுள்ளதுடன், ஒப்படைக்கப்படும் மீனவர்களுக்கு தண்டணை வழங்குவது தொடர்பாக தாங்கள் தீர்மானிப்போம் எனவும் கூறியுள்ளனர். 

எனினும் கட்டைக்காடு மீனவர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையோ, படகுகளையோ தரமுடியாது என திட்டவட்டமாக கூறியபோதும், பொலிஸார் விடாப்பிடியாக அங்கேயே நின்றிருந்தனர். 

இதனையடுத்து மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட விடயத்தையும், அவர்களை பொலிஸார் தம்மிடம் ஒப்படைக்கும்படி அடாவடி புரிவதையும் சுட்டிக்காட்டியிருந்தார். 

இதற்கு பதிலளித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தரையில் நடக்கும் விடயங்களுக்கு மட்டுமே பொலிஸாருடைய கட்டுப்பாட்டுக்குள் உட்பட்டவை, கடலில் நடக்கும் விடயங்கள் நீரியல் வளத்துறை திணைக்களத்துடன் சம்மந்தப்பட்டவை எனக் கூறியிருந்தார். 

இந்த விடயத்தை சம்பவ இடத்தில் நின்றிருந்த பளைப் பொலிஸாருக்கும் பிரதி பொலிஸ்மா அதிபர் கூறினார். இதனையடுத்து பொலிஸார் உடனடியாக அங்கிருந்து வெளியே றவேண்டும். என கூறியதைத் தொடர்ந்து பொலிஸார் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர். 

இதே போல் கரையோரம் கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் 8 தென்பகுதி மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவத்தில் கடற்படையும், இராணுவமும் தலையிட்டு அந்த மீனவர்களை விடுதலை செய்யும்படி கேட்டுள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு