முதலமைச்சா் நிதியம் நியதிச்சட்டத்தை அரசு அங்கீகாிக்காமையால் புலம்பெயா் தமிழா்களின் நிதியை பெற இயலாமல் உள்ளது..

ஆசிரியர் - Editor I
முதலமைச்சா் நிதியம் நியதிச்சட்டத்தை அரசு அங்கீகாிக்காமையால் புலம்பெயா் தமிழா்களின் நிதியை பெற இயலாமல் உள்ளது..

முதலமைச்சர் நிதியம் நியதிச்சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டால் புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் விரும்பியவாறு எல்லாவற்றையும் எமக்கூடாக செய்யலாம். ஆனால் முதலமைச்சர் நிதியம் நியதிச்சட்டத்தை அரசாங்கம் அங்கீகரிக்காமல் உள்ளது என்று நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் இளைய அமைச்சரிடம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சின் இளைய அமைச்சர் JcnFrolinch Holte  உடனான சந்திப்பு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடைய அலுவலகத்தில் இன்று (21) நண்பகல் 12.30 மணிக்கு நடைபெற்றது. இந்த சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளதாக ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக மேலும் முதலமைச்சர் கூறுகையில்,

வடமாகாணம் வருமானத்தை மட்டும் இலக்காக கொண்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவ தற்கு விரும்பவில்லை. வருமானத்தையும், தமிழ் மக்களுடைய கலை, கலாச்சாரம் மற்றும் வாழ்வியலை பாதிக்காத வகையிலேயே சுற்றுலாத்துறையை மேம்படுத்த நினைக்கிறோம். ஆனாலும் மத்திய அரசாங்கம் வெறுமனே வருமானத்தை மட்டும் இலக்காக கொண்டிருக்கின்றது.

தாம் யாழ்ப்பாணம் வருவதற்கு முன்னதாக புலம்பெயர் தமிழர்கள் தம்மை சந்தித்து இங்குள்ள பல்கலைக்கழகத்துடன் இணைந்து தொழிநுட்பம் சார்ந்த சில செயற்றிட்டங்களை தொடங்குவதற்கு ஆர்வமாக உள்ளமையை கூறியதாக கூறப்பட்டது. 

அதற்கு பதிலளிக்கும்போது புலம்பெயர் தமிழர்களும் எங்களுடைய மக்கள். அவர்களை புறந்தள்ள நாங்கள் தயாராக இல்லை. அவர்கள் இங்குவந்து செயற்றிட்டங்களை ஆரம்பிப்பதை நாங்கள் வரவேற்கிறோம். 

மேலும் யாழ்ப்பாணத்தின் கடற்கரைகள் மிக அழகாக உள்ள நிலையில் அவற்றை மேம்படுத்தி சுற்றுலாத்தளங்கலாக மாற்றவேண்டும் என கூறியிருந்தார்கள். அதற்கு பதிலளிக்கும்போது வடமாகாணசபை எமது மக்களுடைய கலை, கலாச்சாரம் மற்றும் வாழ்வியலை அடிப்படையாக கொண்டே சுற்றுலாத்துறையை மேம்படுத்தி வருகின்றது.

 வருமானத்தை மட்டும் இலக்காகக் கொண்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில்லை.  ஆனால் மத்திய அரசாங்கம் வெறுமனே வருமானத்தை மட்டும் இலக்காக கொண்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளோம். 

மேலும் உலகம் பூராகவும் கரையோரங்களில் காணப்படும் கழிவுகளை அகற்றும் செயற்றிட்டம் ஒன்றை தாம் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்த இளைய அமைச்சர் அந்த செயற்றிட்டத்தை யாழ்ப்பாணத்திலிருந்து தொடக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். 

இளைய அமைச்சர் JcnFrolinch Holte தலமையிலான குழு இன்று வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு