25 வயதான இளம் குடும்ப பெண் ஒருவர் தோட்டத்தில் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
25 வயதான இளம் குடும்ப பெண் ஒருவர் தோட்டத்தில் சடலமாக மீட்பு!

தோட்டத்திலிருந்து 25 வயதான இளம் குடும்ப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் புஸ்ஸல்லாவ - சோகமாவத்தை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. 

119 பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலின் படி சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பெண் ஹெல்பொட, கட்டுகிதுல பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய திருமணமான பெண் என தெரியவந்துள்ளது.

ம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக 

கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது கொலையா, தற்கொலையா 

அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் ஏற்பட்ட மரணமா என்பது தொடர்பில் புஸ்ஸல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு