வயோதிப பெண்ணின் கண்ணில் மிளகாய் துாளை வீசி நகைகள் கொள்ளை! 42 வயதான பெண் கைது...

ஆசிரியர் - Editor I
வயோதிப பெண்ணின் கண்ணில் மிளகாய் துாளை வீசி நகைகள் கொள்ளை! 42 வயதான பெண் கைது...

வீடொன்றுக்குள் நுழைந்து வயோதிப பெண்ணின் கண்ணில் மிளகாய் துாளை துாவி சுமார் 3 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையடித்த 42 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் பதுளை - பொரலந்த பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் அதே பகுதியில் வசிக்கும் 42 வயதுடைய பெண்ணே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

72 வயதான குறித்த பெண் தனது வீட்டு சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஒருவர் மிளகாய் பொடியை கண்ணில் தடவி அவரது கழுத்தை நெரித்து கழுத்தில் காணப்பட்ட தங்க நகைகளே 

இவ்வாறு கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இந்தச் சம்பவத்தின்போது சந்தேக நபரால் அபகரிக்கப்பட்ட தங்க நகைகளில் ஒன்று அங்கு காணப்பட்ட பாத்திரத்தில் கிடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு