SuperTopAds

யாழ்.போதனா வைத்தியசாலையில் தேங்கும் மருத்துவ கழிவுகள்! எரியூட்டி ஒன்றை அமைப்பது தொடர்பில் இப்போதுதான் ஆராயும் அதிகாரிகள்...

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் தேங்கும் மருத்துவ கழிவுகள்! எரியூட்டி ஒன்றை அமைப்பது தொடர்பில் இப்போதுதான் ஆராயும் அதிகாரிகள்...

யாழ்.கோப்பையன்மணல் மயானத்தில் மருத்துவ கழிவுகளை தகனம் செய்வதற்கான எரியூட்டி ஒன்றை அமைப்பது தொடர்பாக அளுநரின் செயலாளர் மற்றும் சுகாதார அதிகாரிகள் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 

கடந்த சில நாட்களாக யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவ கழிவுகள் அகற்றப்படாது லொறிகளில் ஏற்றி வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரிப்பதற்கு யாழ்.மாநகர சபைக்குட்பட்ட கோம்பையன் மணல் மயானபகுதியில் 

எரியூட்டி ஒன்றை அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் அமைத்து செயற்படுத்துவது தொடர்பில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் கோம்பையன் மணல் மயானம் இந்து மயானம் என்பதனால் 

இந்து மயான வளாகத்திற்குள் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதா என்பதை ஆராயுமாறு வடக்கு மாகாண ஆளுநர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் - குறித்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் 

ஆளுநரின் செயலாளர் தலைமையில் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் யாழ்.மாநகர சபையின் பிரதம பொறியியலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.