கூந்தலுக்கு கற்றாழை தரும் நன்மைகள்
நமது அழகில் மிக முக்கிய பங்கு வகிப்பது நமது கூந்தலும் கூட. ஆனால் நாம் வெளியே செல்லும் ஏற்படும் தூசி, காலநிலை மாற்றம், மாசு. வெயில் போன்றவற்றால் நமது சருமம் மட்டும்மல்ல நமது கூந்தலும் பாதிப்படைகிறது. கூந்தல் உதிர்வு, பொடுகு, இளநரை, கூந்தல் வளர்ச்சி, வறண்ட கூந்தல் போன்ற ஏராளமான பிரச்சினைகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த பிரச்சினைகளையெல்லாம் எதிர்கொள்ளும் ஒரே ஒரு பொருள் தான் கற்றாழை. இந்த கற்றாழையில் கூந்தலுக்கு அத்தியாவசியமான 100 விதமான போஷாக்குகள் அடங்கியுள்ளன.
சரி வாங்க இந்த கற்றாழை ஜெல் நமது கூந்தலுக்கு எந்தெந்த வகைகளில் பயன்படுகிறது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
கூந்தல் வளர்ச்சி
கற்றாழை ஜெல்லில் புரோட்டியோலைடிக் என்சைம் உள்ளது. இது தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி மயிர்கால்களுக்கு போஷாக்கு கொடுத்து கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
பட்டு போன்ற கூந்தல்
கற்றாழை ஜெல் உங்கள் கூந்தலை உடனடியாக பட்டு போன்று மென்மையாக மாற்றி விடும். எனவே உங்கள் கூந்தலை சிக்கல் இல்லாமல் பராமரிக்க எளிதாகும். இனி எந்த ஹேர் ஸ்டைலையும் நீங்கள் போட்டு அசத்தலாம்.
கூந்தல் அடர்த்தி
இது கூந்தல் உதிர்வை குறைத்து கூந்தல் அடர்த்தியாக வளர பயன்படுகிறது.
அழற்சி
இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் அழற்சி போன்றவற்றைப் போக்குகிறது.
பூஞ்சை எதிர்ப்பு பொருள்
கற்றாழையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள் தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் வறண்ட சருமத்தை போக்கி ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கிறது.
போஷாக்கு
கற்றாழை ஜெல்லில் உள்ள புரோட்டியோலைட்டிக் என்சைம், புரோட்டீன், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து மயிர்கால்களை ஆரோக்கியமாக வைக்கிறது.
ஈரப்பதம்
கற்றாழை ஜெல் உங்கள் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதம் மற்றும் நீர்சத்தை கொடுக்கிறது.
வளரும் இடங்கள்
இதை உங்கள் வீட்டு தொட்டியில் மற்றும் தோட்டங்களில் கூட எளிதாக வளர்த்து கொள்ளலாம். தண்ணீரே இல்லாமல் வறட்சியான பகுதிகளில் கூட இது நன்கு வளரும் தன்மை கொண்டது. சிறியதாக ஒரு செடியை நட்டால் போதும். அது படந்து வளர ஆரம்பித்து விடும்.
கற்றாழை பேக்
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்
- கற்றாழை ஜெல்
- பயன்படுத்தும் முறை
இதை இரண்டையும் நன்றாக கலந்து மெதுவாக தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் மசாஜ் செய்து வர வேண்டும். பிறகு நீரில் அலசிக் கொள்ளுங்கள். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல பட்டு போன்ற கூந்தல் அசைந்தாடும்.
பயன்கள்
கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தை தக்க வைத்து கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரிக்கும். எனவே இனி பிளவுபட்ட முடியை நீங்கள் வெட்ட வேண்டிய அவசியம் இல்லை. உண்மையை சொல்ல போனால் கற்றாழை ஒரு ஹேர் சூப்பர் ஹீரோ என்று சொல்லலாம். என்னங்க இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க. இனி நீங்களும் ராபுன்ஷல் கூந்தலழகி ஆகலாம்.