வடமாகாண ஆளுநரின் கடிதங்களுக்கு உடன் நடவடிக்கை எடுங்கள், ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடிதம்....

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநரின் கடிதங்களுக்கு உடன் நடவடிக்கை எடுங்கள், ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடிதம்....

வடமாகாண சுகாதாரத்துறையின் இடமாற்றங்கள் மற்றும் நியமனம் தொடர்பில்  ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

வடக்கு சுகாதார துறையில் இடம்பெற்ற நிர்வாக முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் வடமாகாண ஆளுநருக்கு குற்றச்சாட்டுகளை ஏற்கனவே வழங்கி வந்தனர்.

வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் தொடர்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் ஆளுநர் செயலகம் வரை சென்றது. இந்நிலையில் விடயம் தொடர்பில் ஆளுநர் மத்திய சுகாதார அமைச்சுக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பிய நிலையில் 

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதால் நடவடிக்கைகள் தாமதமாயின. இந்நிலையில் தேர்தலை குறித்த திகதியில் நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு தெரிவித்தது.

இவ்வாறான நிலையில் வடமாகாண ஆளுநரனால் மத்திய சுகாதார அமைச்சிக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்ட கடிதங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் சந்திர குத்தாவுக்கு 

ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் எழுத்து மூலமாக பணிப்புரை விடுத்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு