கருணாவும் கத்தரிக்காயும்.. கூறும் கதைகளுக்கெல்லாம் வியாக்கியானம் தேவையில்லை! சீறினார் சிவாஜி...
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக பழ நெடுமாறன் கூறிய கருத்தை நான் மறுக்கமாட்டேன். என வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தொிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிடுகையில்,
இந்தியாவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக பயணமாகி உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் காசி ஆனந்தனையும் சந்தித்து கலந்துரையாடியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரனின் உடல் என காட்டப்பட்டது. அவரது உடல் இல்லை என்பதை 2009 மே 20ஆம் திகதியிலிருந்து மறுத்துவருவதாகவும் அத்தோடு டி.என்.ஏ பரிசோதனை செய்யுமாறும் சவால் விட்டு வருகின்றேன்.
அதற்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை.மதிவதனியின் சகோதரியார் பத்து வருடங்களுக்கு முன்னர் அவரது தாயார் இறந்ததை பற்றி அறிவித்த பொழுது கூறிய செய்தி, தமது குடும்பத்தில் அனைவரும் நினைப்பதுபோல் முழுக்க முடிந்து விடவில்லை,
நேராக சந்திக்கும்போது கூறுவேன் எனவும் யாராவது ஒருவராவது உயிருடன் இருப்பார்கள் என்றும் கூறியிருந்தார். இதற்கு மேலாக நெடுமாறன் ஐயா அவர்களை நம்புகின்றோம்.
விரிவான ஈழத் தமிழர்களின் செயல் திட்டங்களில் நெடுமாறன் ஐயா அவர்களும் கவிஞர் காசி ஆனந்தனும் செயல்படுவார்கள். அவர்களுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம் எனவும் தெரிவித்திருந்தார்.
அத்தோடு, பிரபாகரன் இல்லை என்பது தொடர்பாக கருணா தெரிவித்த கருத்து தொடர்பாக தெரிவிக்கையில், கருணாவும் கத்தரிக்காயும் கூறும் கதைகளும் வியாக்கியானங்களும் தேவையில்லை எனவும் கோபம் வெளியிட்டிருந்தார்.