23 வயது இளம்பெண்ணுக்கு தாலி கட்டிய 65 வயது தாத்தா

ஆசிரியர் - Editor II
23 வயது இளம்பெண்ணுக்கு தாலி கட்டிய 65 வயது தாத்தா

ந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதியவர் ஒருவர் தன்னை விட 42 வயது குறைவான பெண்ணை தன்னுடைய 6 மகள்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து செய்து கொண்டுள்ளார்.

குறித்த மாநிலத்தில் பாராபங்கி மாவட்டத்தில் ஹூசைனாபாத் பகுதியை சேர்ந்த நக்கத் யாதவ் என்ற 65 வயது தாத்தாவிற்கு 6 மகள்கள் உள்ளனர்.

இந்த 6 மகள்களுக்கும் உரிய முறையில் நக்கத் யாதவ் திருமணம் செய்து வைத்து தனது கடமை நிறைவேற்றியுள்ளார். 

இதற்கிடையில் சில வருடங்களுக்கு முன்பு நக்கத் யாதவ்வின் மனைவி மரணமடைந்ததால், தனிமையில் இருந்த 65 வயது நக்கத் யாதவ் வேறு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதற்காக தன்னை விட 42 வயது குறைவான நந்தினி என்ற 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ள நக்கத் யாதவ் முடிவு செய்தார்.

நக்கத் யாதவ்வின் 6 மகள்களும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், இரு வீட்டாரின் முன்னிலையில் அயோத்தி மாவட்டத்தில் உள்ள கமகாயா தேவி கோவிலில்  நந்தினி என்ற 23 வயது பெண்ணுக்கு நக்கத் யாதவ் (வயது 65) தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார்.

இந்த திருமணம் குறித்து பேசிய நக்கத் யாதவ், மனைவியின் மறைவுக்கு பின் தனிமையில் வாடியாதால் மறுமணம் செய்து கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மணப்பெண் நந்தினியும் இந்த திருமணத்தில் தனக்கு மகிழ்ச்சி எனவும், வயது வித்தியாசம் ஒரு பொருட்டே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு