வெளிநாடுகளில் புதிய ஆசிரமங்கள்!! -உருவாக்க நித்யானந்தா திட்டம்-

ஆசிரியர் - Editor II
வெளிநாடுகளில் புதிய ஆசிரமங்கள்!! -உருவாக்க நித்யானந்தா திட்டம்-

இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளை போன்று வேறு சில நாடுகளில் சில கோவில்களை அண்மையில் நித்யானந்தா சாமியார விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி அங்கிருந்தவாறு பல்வேறு நாடுகளிலும் உள்ள அவரது பக்தர்களிடம் பேசி வருகிறார். இதுவரை கைலாசா நாடு எங்கிருக்கிறது என்ற பல யூகத்தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இது தொடர்பாக புதிய தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதாவது, பசிபிக் பெருங்கடல் பகுதியில் கோஸ்டாரிகா தீவுகளில் ஒன்றில் தான் கைலாசா அமைந்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. அண்மையில் கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில், கைலாசா நாட்டை அமெரிக்கா அங்கீகரித்தாக கூறப்பட்டு இருந்தது.

அண்மையில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் சில கோவில்களை நித்யானந்தா விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பல நாடுகளில் தனது ஆசிரமங்களை திறக்கவும் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

முதலீடுகள் மூலம் கைலாசாவில் அனைவருக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக திட்டங்களையும் அவர் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, நாளை 18 ஆம் திகதி மகா சிவராத்திரி விழாவை கைலாசாவில் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு