யாழ்.கலாச்சார மண்டபம் எம்மை பிராந்திய வரலாற்றுடன் இணைத்துள்ளது.. வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா...

ஆசிரியர் - Editor I
யாழ்.கலாச்சார மண்டபம் எம்மை பிராந்திய வரலாற்றுடன் இணைத்துள்ளது.. வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா...

யாழ்ப்பாணக் கலாச்சார மண்டபம் கலைகள், நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரம் என்பவற்றைக் கொண்டாடும் வகையில் பிராந்திய வரலாற்றுடன் இணைக்கப்படமையை இட்டு மகிழ்ச்சி அடைகிறேன் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

இந்தியா நிதி உதவியின் கீழ் அமைக்கப்பட்ட கலாச்சார மண்டபத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கையளிக்கும் நிகழ்வில் வரவேற்புரையை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இப்பிரதேசத்தில் பலவிதமான கலாச்சாரங்களிலிருந்து 

மிக அதிகமான கட்டிடக்கலை வேலைகள் எமக்குக் கிடைத்துள்ளன. புராதன நகரங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கானவிதைகள் எம்மிடம் கிடைத்துள்ள நிலையில் இந் நன்கொடையை எமக்கு வழங்கியமைக்காக நாம் இந்திய அரசிற்கும்மக்களுக்கும் நன்றி உடையவர்களாக இருக்கின்றோம். 

இக்கொடையானது கலைஉலகத்துடன் எம்மை இணைப்பதுடன் அவை நாட்டின் வளர்ச்சியைத் தூண்டும்மிகப்பெரிய வளத்தேக்கங்களாகும். வெளிநாட்டிலுள்ள இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட மக்களுக்காகத் தடையற்ற நிலைபேறான அணுகுதலையும், தங்கியிருத்தலையும் செயற்படுத்த 

அரசானது தற்போது விசா நடைமுறைமையினை வடிவமைத்துவருகின்றது. இந்தியாவிலிருந்துஇலங்கைக்கும் பயணிக்கின்றனர். விமானங்கள் கிட்டத்தட்ட முழு எண்ணிக்கையானபயணிகளுடன் இயங்குகின்றன. பயணப் படகுகள் ஆரம்பிப்பதற் குத் தயாராகஉள்ள நிலையில் இவ் இணைப்பின் விளைவாக இப்பயணப் பாதைகளை கணிசமானஎண்ணிக்கையானவர்கள் பயன்படுத்துவர். 

இது பாண்டிச்சேரி, குஜராத், கர்நாடகம், தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய சில பெயர் குறிப்பிடப்படுகின்ற சந்தைஅணுகுதலுக்கான வாய்ப்பினை ஏற்படுத்துகின்றது. தமிழ் நாட்டுடனான சுற்றுலாப்பாதை இறுதி நிலையை எய்தியுள்ள நிலையில் இந்தியாவிலுள்ள பழனி ஆச்சிரமம் மற்றும் கோவிலில் சித்த போதனை மற்றும் மருத்துவமனை அமைப்பதற்குத்தீர்மானிக்கப்படடுள்ளது. 

எமது செயற்பாடுகள் அரசின் கொள்கைகளிலிருந்தும் மற்றும் 13 ஆவது திருத்தத்தில்9 ஆவது அட்டவணையின் மாகாணப் பட்டியலிலிருந்தும் பெறப்பட்டவையாகும். மாகாணத்தில் 401,000 குடும்பங்களுக்கு உதவி புரிவதற்காக 35,504 மாகாணப்பொதுச்சேவை உத்தியோகத்தர்கள் எம்மிடம் உள்ள நிலையில் காணி அற்றவர்களுக்குக் காணி கிடைப்பதை உறுதி செய்யும் பிரத்தியேகஎண்ணம் உள்ளது. 

உள்ளுர் நுகர்வு மட்டுமன்றி வெளிநாட்டுச்சந்தைகளுக்கான விவசாயத்திற்கான இலக்குகளையும் கொண்டுள்ள நிலையில் துப்பிக்கக்கூடிய வலுசக்தியை உருவாக்கும் ஒரு மாகாணமாக இருக்க விரும்புகின்றோம். நாம் மாற்று வலுவுடையோர் மற்றும்உளநல ரீதியிலான சவால்களைக் கொண்டவர்களுக்கும், 

எவ்வாறு ஆழமான பராமரிப்புநடவடிக்கைகளை மேற்கொள்கின்றோமோ அதேபோன்று முதிய குடிமக்களுக்கும்ஆழமான பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம். 2023 இல் உலகவங்கியின் திட்டத்தினால் நாடு பூராவும்ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பிற் புரட்சிகரமான மாற்றம் ஏற்படும். 

ஒவ்வொருமாவட்டத்திலும் காடு வளர்த்தல் மற்றும் நீரேந்துவதற்கான நீர்த்தேக்கங்களைஉருவாக்கப்படும். அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இப்பிரதேசத்தில் வர்த்தகத்தில் முதலீடு செய்யும்நிறுவனங்களை ஒன்றுகூட வேண்டுமென விரும்பியுள்ளார். 

சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் மலேசியா போன்ற சில நாடுகளுடன் வெளிநாட்டுத்தொழிற் சற்தைகளை நாம் குறிக்கோளாகக் கொண்டுள்ளோம்.குஜராத்திலுள்ள தடயவியல் விஞ்ஞானப்பல்கலைக்கழகத்திலிருந்து தடயவியலில் திறமையைப் பெறுவதற்காக கலந்துரையாடியுள்ளதுடன்

அவுஸ்திரேலியாவிலுள்ள மாநிலங்களில் காணப்படுகின்றமை போன்ற சேமிப்பு மற்றும்ஓய்வூதியத் திட்டம் இங்கேயும் சாத்தியமாக்க அமைய முடியும்.ஆகவே சமுதாயங்கள் பாதுகாப்பாக இருப்பதையும், சட்டமும் ஒழுங்கும் பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்வதில் 

நாம் ஆணித்தரமாக உள்ள நிலையில் எமது வடக்கு மக்கள் மீது ஆழ்ந்த அக்கறைகொண்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு