கனடா துாதரகத்தின் உப அலுவலகம் ஒன்றை அமையுங்கள்! கனடா துாதுவரிடம் யாழ்.மாநகர முதல்வர் கோரிக்கை...

ஆசிரியர் - Editor I
கனடா துாதரகத்தின் உப அலுவலகம் ஒன்றை அமையுங்கள்! கனடா துாதுவரிடம் யாழ்.மாநகர முதல்வர் கோரிக்கை...

கனடா தூதரகத்தின் உப அலுவலகம் ஒன்றை வடமாகாணத்தில் நிறுவுமாறு யாழ்.வந்த இலங்கைக்கான கனடா தூதுவரிடம் யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனால்ட் கோரிக்கை விடுத்துள்ளார். 

நேற்று திங்கட்கிழமை மாலை இலங்கைக்கான கனடா தூதுவர் எரிக்வோல்ஸ் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட்டுக்கும் இடையிலான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

மேலும் தூதுவரிடம் முதல்வர் கூறுகையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை மீள கட்டி எழுப்புவதற்கு கனடா பல்வேறு உதவிகளை வழங்க வேண்டும். வடமாகாணத்தில் வாழ்ந்த அனேகமானோர் 

கனடாவில் வாழ்கின்ற நிலையில் அவர்களின் உறவுகள் கனடாவுக்கு அதிகம் சென்ற வருகின்றனர். இவ்வாறான நிலையில் கனடாவின் உப தூதரகத்தின் அலுவலகம் ஒன்றை வட மாகாணத்தில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே கனடா டொரண்டோ நகரத்திற்கும் யாழ்.மாநகரத்துக்கு இடையிலான உடன்படிக்கை இலங்கை அரசாங்கத்தின் தடைகளால் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது. 

அது மட்டுமல்லாது தமிழ் மக்களுடைய நிரந்தர அரசியல் தீர்வு இலங்கைக் தீவுக்குள் கிடைக்கப் பெறாத நிலையில் தமிழ் மக்கள் தொடர்ந்து தமது நிரந்தர அரசியல் தீர்வுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

35 வருடங்களாக இலங்கை அரசியலில் மாறிவரும் தலைவர்கள் அரசியல் அமைப்பில் உள்ள 13 வது திருத்தச் சட்டத்தை அமுள்படுத்துவதற்கு பின்னாடித்து வருகின்றனர். இவ்வாறு பல கோரிக்கைகளை 

யாழ்.வந்த கனடா முதல்வர் முன்வைத்த நிலையில் வடமாகாணத்தில் கனடா தூதரகத்தின் அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கு எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாக முதல்வரிடம் உறுதி அளித்தார்.

குறித்த சந்திப்பில் இலங்கைக்கான கனடா தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு