பிறந்த குழந்தைகள் நிறைந்திருந்த அறை!! -நிலநடுக்கத்தின்போது குழந்தைகளை பாதுகாக்க 2 தாதியர்கள் செய்த துணிச்சல் செயல்-

ஆசிரியர் - Editor II
பிறந்த குழந்தைகள் நிறைந்திருந்த அறை!! -நிலநடுக்கத்தின்போது குழந்தைகளை பாதுகாக்க 2 தாதியர்கள் செய்த துணிச்சல் செயல்-

துருக்கியில் நடந்த நிலநடுக்கத்தின்போது தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல், அறை முழுவதும் இருந்த புதிதாக பிறந்த குழந்தைகளை 2 தாதியர்கள் பாதுகாத்து நின்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை துருக்கியும் சிரியாவும் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சிலவற்றை எதிரிகொண்டன. இந்தப் பேரழிவில் ஏற்கனவே 35,000ற்க்கும் அதிகமான உயிர்கள் பறிபோனது.

துருக்கியில் மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், ஒரு தனித்துவமான மனிதாபிமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அதில், இரண்டு தாதியர்கள்  நிலநடுக்கைத்தை எதிர்கொள்வதற்குப் பதிலாக, பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற தங்கள் உயிரை பணயம் வைத்ததைக் காட்டுகிறது.

காசியான்டெப்பில் உள்ள ஒரு வைத்தியசாலையின் கண்காணிப்பு கேமரா வீடியோ பதிவில், டெவ்லெட் நிஜாம் மற்றும் கஸ்வால் காலிக்சன் என அடையாளம் காணப்பட்ட இரு தாதியர்கள், நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ​​பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு ஓடுவதைக் காட்டுகிறது.

பெரும்பாலான மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வெளியில் ஓடிய அந்தத் தருணத்தில், இந்த இரு தாதியர்கள் வந்து இன்குபேட்டர்களில் வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் விழுந்துவிடாமல் தடுப்பதற்காக நின்றனர். நிலநடுக்கம் முழுவதும், அறைக்குள் அனைத்தும் அதிர்ந்தபோது, ​​இருவரும் துணிச்சலாக தங்களைத் தாங்களே பிடித்துக் கொண்டு குழந்தைகளைப் பாதுகாத்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு