சுற்றுலா சென்றிருந்த 21 பேர் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது!

ஆசிரியர் - Editor I
சுற்றுலா சென்றிருந்த 21 பேர் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது!

மலையகம் - ஹட்டனுக்கு சுற்றுலா சென்ற 21 பேர் ஹட்டன் கோட்ட விசேட குற்றத்தடுப்பு பரிவினரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சிவனொளிபாதமலை நுவரெலியா உள்ளிட்ட பிரதேசங்களுக்கு அதிகமான சுற்றுலா பிரயாணிகள் வருகை தந்தனர்.

இவ்வாறு வருகை தந்த சுற்றுலா பிரயாணிகளை ஹட்டன் மோப்ப நாய் பிரிவின் ஸ்டூவட் என்ற மோப்ப நாயின் உதவியுடன் வாகனங்களை பொல்பிட்டிய 

மற்றும் கினிகத்தேனை பகுதிகளில் சோதனை செய்த போது இவர்களிடமிருந்து சட்டவிரோத சிகரட்டுக்கள், கேரளா கஞ்சா, ஹெரோயின், போதை மாத்திரைகள் 

உள்ளிட்ட போதை பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் இந்த போதை பொருட்கள் வைத்திருந்த நபர்களை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் வென்னப்புவ கொழும்பு சிலாபம் உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு