13 எமது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது!
13வது திருத்தத்தை கொண்டு வருவது நல்லதுதான், ஆனால் அது தமது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய நாட்டில் பெரும்பான்மையான சிங்கள மக்களின் கருத்துக்களையே அரசாங்கம் எப்போதும் நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கேள்வி - 13 ஆவது திருத்தத்தை கொண்டு வருவதாக அரசு வாக்குறுதியளித்துள்ளதா?
“வாக்குறுதிகள் கொடுத்தது உண்மைதான்.. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறார்கள் என்பதும் உண்மைதான், ஆனால் நடுவில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை... இன்று வரை அப்படித்தான் நடந்திருக்கின்றது. எந்த அரசாங்கம் என்றாலும் எதையும் செய்ய முற்படும் போது அதை எதிர்கட்சி வந்து ஏதாவது செய்துவிடுகின்றது. ரணில் விக்கிரமசிங்க 2001 ஆம் ஆண்டு சந்திரிகாவை கொண்டு வந்ததை எதிர்த்து பாராளுமன்றத்திற்குள் அரசியலமைப்பை கிழித்து எரித்தார். ஒவ்வொருவரும் எதிர்க்கிறார்கள் கடைசியில் எமக்கு ஒன்றும் கிடைக்காது. ஆனால் தற்போது தருவதாக கூறியுள்ளனர்.
கேள்வி - நாட்டில் உள்ள எதிர்ப்பை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?
"யாருடைய எதிர்ப்பு"
கேள்வி - தேரர்களின்
"இவர்களெல்லாம் நாட்டை ஆள்பவர்களா? இல்லையே, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்லலாம்.
கேள்வி - 13 ஐ கொண்டு வராமல் விடமாட்டீர்களா... ?
"நாங்கள் சமஷ்டி முறையை கண்டிப்பாக கொண்டு வருவோம்"