யாழ்ப்பாணத்தில் தேசிய சுதந்திர தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தடல்புடல்! மாவட்ட செயலர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய ஏற்பாட்டாளர்கள்...
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 11ம் திகதி நடத்தப்படவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளும் ஊர்திகளுக்கு பாதுகாப்பு வழங்குவது யார்? என ஜனாதிபதி செயலக அதிகாரிகளிடம் அரசாங்க அதிபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
11ம் திகதி சனிக்கிழமை யாழ்.கலாச்சார மத்திய நிலையத்தில் தேசிய சுதந்திர தின நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்வார் என கூறப்பட்டாலும் அது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் வடமாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களில் இருந்தும் தலா ஒரு ஊர்தி அனுப்பபடவேண்டும் என ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். எனினும் ஊர்திகளுக்கான கொடுப்பனவு உள்ளிட்ட விடயங்கள் இல்லை என கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு உறுதிகளை கொண்டு வரும்போது வீதிகளில் ஏதாவது எதிர்ப்புகள் கிளம்பும் பட்சத்தில் அதனை எவ்வாறு சமாளிப்பது?
என்பது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட உயர்மட்ட கலந்துரையாடலின்போது 5 மாவட்டங்களினதும் அரச அதிபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அவ்வாறு ஊர்திகள் கொண்டு வரப்படுமாயின்
ஊர்திகளுடன் வருபவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவது எப்படி? எனவும் கேள்வி எழுப்பியதுடன், அதற்கான பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றனர்.