திருடபோன இடத்தில் தனது தொலைபேசியை தவறவிட்ட திருடன்!

ஆசிரியர் - Editor I
திருடபோன இடத்தில் தனது தொலைபேசியை தவறவிட்ட திருடன்!

திருடுவதற்கு சென்றிருந்த இடத்தில் திருடன் தனது தொலைபேசியை கைவிட்டுச் சென்ற சம்பவம் நானுஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

வீட்டினுள் திருடன் இருப்பதைக் கண்டு வீட்டு உரிமையாளர் சத்தம் போட்டு அயலவர்களை அழைத்துள்ளார். 

சத்தம் கேட்டு திருடன் வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளான். தப்பி ஓடியவனை அயலவர்கள் துரத்திச் சென்றபோது கையடக்கத் தொலைபேசி கீழே விழுந்துள்ளது. 

அதனை அறிந்து கொள்ளாத திருடன் தப்பி சென்றுள்ளான்.வீட்டு உரிமையாளர் கண்டெடுத்த கையடக்கத் தொலைபேசி மூலம் 

திருடனை அடையாளம் காண்பதற்கு நானுஓயா பொலிஸ் நிலையத்தில் கையடக்கத் தொலைபேசியை ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு