மதுவரி திணைக்களத்திற்கு அருகில் வைத்து போயா தினத்தில் மதுபான வியாபாரம்! ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
மதுவரி திணைக்களத்திற்கு அருகில் வைத்து போயா தினத்தில் மதுபான வியாபாரம்! ஒருவர் கைது..

யாழ்.சாவகச்சோி மதுவரி திணைக்களத்திற்கு அருகிலுள்ள வீட்டில் பியர், சாராயம் விற்பனை செய்த ஒருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

30 வயதுடைய அதே இடத்தைச் சேர்ந்த நபர் போயா தினமாகிய இன்றைய தினம் சாவகச்சேரி மது வரி திணைக்களத்திற்கு அருகாமையில் உள்ள வீட்டில் சாராயம் மற்றும் பியர் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் 

மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து நேற்றைய தினம் இடம் முற்றுகையிடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து அதிக அளவு சாராய போத்தல்கள்,

மற்றும் பியர் ரின்கள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது,

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு