மகனின் தாக்குதலில் தந்தை உயிரிழப்பு! மகன் மற்றும் அயல் வீட்டார் உட்பட 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
மகனின் தாக்குதலில் தந்தை உயிரிழப்பு! மகன் மற்றும் அயல் வீட்டார் உட்பட 3 பேர் கைது..

மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மகன் மற்றும் அயல்வீட்டார் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதர்செட் (பூப்பனை மேல் பிரிவு) தோட்டத்தின் இலக்கம் 26 கங்காணி லயக்குடியிருப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இந்த கொலை சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான குமாரவேல் தியாகபிரகாஸ் (வயது 45) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் தனது தந்தையை தாக்கியதாக பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கிய மூத்த மகன் கந்தப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு, அயல் வீட்டார் இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு