இதுவே எனது முதலாவது நீதிமன்ற அனுபவம், அதற்காக சோர்ந்துவிடமாட்டேன்..! தவத்திரு வேலன் சுவாமிகள்..

ஆசிரியர் - Editor I
இதுவே எனது முதலாவது நீதிமன்ற அனுபவம், அதற்காக சோர்ந்துவிடமாட்டேன்..! தவத்திரு வேலன் சுவாமிகள்..

இனத்தின் விடுதலை நோக்கிய பயணத்தில் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் தாண்டி அறவழி போர் தொடரும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டவரை மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் கூறியுள்ளார். 

ஜனாதிபதி வருகையின்போது நல்லுாரில் எதிர்ப்பு போராட்டம் நடத்தியமைக்காக வேலன் சுவாமி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு நேற்று யாழ்.நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, வழக்கின் பின் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் குறிப்பிட்ட அவர், இதுவே எனது முதல் வழக்கு அனுபவமாகும். எமது உரிமை சார்பிலும், இனம் சார்ந்துமே நாங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றோம். மாறாக எமது தனிப்பட்ட தேவைகளோ, பிரச்சினைகளோ கருதி முன்னிலைப்படுத்தப்படவில்லை. 

ஒரு இனத்தின் விடுதலையினை நோக்கிய பயணத்தில் பல தடைக் கற்கள் வரும். அவைகளினை கடக்க வேண்டும் என்ற இலட்சிய வேகத்தினையும் ஊந்து சக்தியினையும் இந்த அனுபவம் தருகின்றது. எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு