தமிழரசு கட்சி வளா்ச்சிக்கு மக்கள் பிரதிநிதிகள் கட்டாயம் பணம் செலுத்தவேண்டும் என தீா்மானம்..

ஆசிரியர் - Editor I
தமிழரசு கட்சி வளா்ச்சிக்கு மக்கள் பிரதிநிதிகள் கட்டாயம் பணம் செலுத்தவேண்டும் என தீா்மானம்..

தமிழ் அரசுக் கட்சியின் நிதிச் செலவுகளை ஈடு செய்யும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் கண்டிப்பாக மாதாந்தம் பங்கு பணத்தை செலுத்தியே ஆக வேண்டும் எனத் தீர்மாணிக்கப்பட்டது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயல்குழுக் கூட்டம் நேற்றைய தினம் முல்லைத்தீவில் இடம்பெற்றது.

இதன்போது கட்சி சார் செலவீனங்களை நிவர்த்தி செய்யும் வகையிலும் கடந்த கால அனுபவங்கள் எதிர்கால நிதித் தேவைகள் என்பவற்றின் அடிப்படையில் அதனை நிவர்த்தி செய்ய கட்சி உறுப்பினர்களில் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் பங்களிப்பினை செலுத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில் ஆராய்ந்து கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 ஆயிரம் ரூபாவும் மாகாண சபை உறுப்பினர்கள் 5 ஆயிரம் ரூபாவும் செலுத்துவதோடு தவிசாளர்களாக இருப்பவர்கள் ஆயிரத்து 500 ரூபாவும் ஏனைய உறுப்பினர்கள் மாதாந்தம் ஆயிரம் ரூபாவும் கட்சியின் செலவீனங்களிற்காக இம் மாதம் முதல் செலுத்தி தமது கட்சிப் பங்களிப்பினை உறுதி செய்ய வேண்டும் . 

இவ்வாறு சேகரிக்கப்படும் நிதியில் இருந்து எதிர்காலத்தில் கட்சிசார் செலவீனங்கள் மேற்கொள்ளப்பட்டு பொருளாளர் ஊடாக அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத். தீர்மானிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு