இலங்கையில் சிறுநீரக நோய் தாக்கம் அதிகம் உள்ள மாகாணங்களில் வடமாகாணம் முதலிடத்தில்..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் சிறுநீரக நோய் தாக்கம் அதிகம் உள்ள மாகாணங்களில் வடமாகாணம் முதலிடத்தில்..

சிறுநீரக நோயால் பாதிக்கப்படுவோரில் வடக்கு மாகாணம் முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி சிறுநீரக பாதுகாப்பு செயலணியின் ஆலோசகர்   வைத்திய நிபுணர் வைத்திய  கலாநிதி கே.ஆர்.கிசாந் இதற்கு விரைந்து தீர்வு காணப்படாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய விபரீதங்களுக்கு வடக்கு மக்கள் முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும்  தெரிவிக்கையில்,

வடக்கில் சுகாதார பாதுகாப்பு  முற்றாக  செயலிழந்த நிலையில் வடக்கு மக்களுக்கு சிறுநீரகப்பாதிப்பு அபாயம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. வடக்கிலுள்ள நீர் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டதில் அதிகரித்தளவில் கனியுப்புக்கள் காணப்படுகின்றமை அவதானிக்க முடிந்தது.  நீரில் அதிகரித்த கனியுப்புக்கள் காணப்படுவதும் கனியுப்புக்கள் குறைவாக காணப்படுவதும் சிறுநீரக நோய்க்கு காரணமாக அமைகின்றன.

கனியுப்பு குறைவான நீரைப் பருகுவதால் நுவரெலியா மக்கள் சிறுநீரக பாதிப்புக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் வடக்கு மக்கள் அதிகளவான கனியுப்புக்கள் நிறைந்த நீரைப்பருகுவதால் சிறுநீரகப் பாதிப்புக்குள்ளாகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. வடக்கில் உள்ள நீர்நிலைகளை பரிசோதித்ததில் 700 வரையான கனியுப்புக்கள் காணப்படுவது உறுதிப்படுத்தியுள்ளோம். 

மேலும் வடக்கில் இடம்பெற்ற மூன்று தசாப்த யுத்தத்தின் போது நீருடன் சேர்ந்த இரசாயனங்களும் அதிகரித்த விவசாய இரசாயனப் பயன்பாடும் சிறுநீரகப் பாதிப்புக்கான அபாயத்தை அதிகரித்துள்ளன.

மேலும் இலங்கையில் 4 இலட்சத்து 88 ஆயிரத்து 442 சிறுநீரக நோயாளர்கள் இனம்காணப்பட்ட நிலையில் 60 வீதமானவர்கள் வட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சியான செய்தியை வெளியிட்ட அவர் இது குறித்து வடக்கு மக்கள் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லையெனவும்  குற்றம் சாட்டினர்.

சிறுநீரகப் பாதிப்புக்கு பின்னரான நடவடிக்கைகளே வடக்கில் இடம்பெறுவதாகவும் சிறு நீரகப் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் பாதுகாப்பதற்கான எந்த முன்னேற்பாடுகளும் வடக்கில் இல்லை.மேலும் சிறுநீரகப் பாதுகாப்பு தொடர்பில் தென்பகுதியுடன் ஒப்பீட்டளவில் 100 ஒரு மடங்கு கூட வடக்கில் விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் இல்லாமை கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

வடக்கில் உள்ள மக்கள் அனைவரும் இலவசமாக சிறுநீரகப் பரிசோதனை செய்வதற்கான வசதி விரைந்து மேற்கொள்ளப்படவேண்டும் . இதற்கான ஏற்பாட்டை வடக்கு சுகாதார அமைச்சு மேற் கொள்ள முடியும். வடக்கில் கிராம சேவகர் பிரிவு ரீதியாக பாவனைக்குட்படுத்தப்படும் 

நீர் பகுப்பாய்வு செய்யப்பட்டு அதிகமான கனியுப்புக்கள் காணப்படும் பிரதேசங்கள் முன்னுரிமை அடிப்படையில் பரிசோதனைக்குட்படுத்துவதுடன் 

சிறுநீரக நோய்ப்பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகள் விரைந்து எடுப்பதே வடக்கில் அதிகரித்துவரும் சிறுநீரக நோயாளர் தொகையை கட்டுப்படுத்த ஒரே வழி எனவும் தெரிவித்தார்  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு