கோர விபத்து தொடர்பில் ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்பு! மாணவர்களின் உயிருக்கு பாதிப்பில்லை, முச்சக்கரவண்டி, ஹயஸில் பயணித்தோரே உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
கோர விபத்து தொடர்பில் ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்பு! மாணவர்களின் உயிருக்கு பாதிப்பில்லை, முச்சக்கரவண்டி, ஹயஸில் பயணித்தோரே உயிரிழப்பு..

நுவரெலியா - ரதெல்ல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களை விமானப்படை உலங்குவானனுார்தி மூலம் கொழும்புக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார். 

பாடசாலை மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்ற பேருந்து வான் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (20) மாலை இடம்பெற்றுள்ளது. 

வானில் பயணித்த 6 பேரும் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரும் விபத்தில். உயிரிழந்துள்ளதுடன் 44 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியை சேர்ந்த 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் மற்றும் வான் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.

உயிரிழந்தவர்களில் மூன்று பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து 200 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது .விபத்தின் போது பேருந்தில் 44 மாணவர்கள் பயணித்துள்ளதாகவும், 

41 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும், 3 சிறுவர்கள் எவ்வித காயங்களுமின்றி உயிர் பிழைத்துள்ளதாகவும் காயமடைந்த மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் நுவரெலியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை விரைவில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா வைத்தியசாலையின் பணிப்பாளர் மகேந்திர சேனவிரத்ன தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் நானுஓயா விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும், தீவிர சிகிச்சையில் உள்ளவர்களை விமானப்படையினர் உலங்குவானூர்தி மூலம் கொழும்புக்கு அழைத்து வருமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு