SuperTopAds

மாவை சேனாதிராஜா அடுத்த முதலமைச்சராக வேண்டும் என பலா் விரும்புகிறாா்கள், நா.உ சி.சிறீதரன்..

ஆசிரியர் - Editor I
மாவை சேனாதிராஜா அடுத்த முதலமைச்சராக வேண்டும் என பலா் விரும்புகிறாா்கள், நா.உ சி.சிறீதரன்..

வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே போட்டியிட வேண்டுமென பலரும் விருப்பம் கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். 

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இணைந்து கோருமிடத்தே தான் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்யிட தயாரென தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்திருக்கின்ற கருத்து தொடர்பில் வினவிய போதே சிறிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக அடுத்து வரும் வட மாகாண சபைத் தேர்தலிலே யார் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதென்பதில் நாங்கள் ஒரு முடிவிற்கு வந்திருக்கிறோம். எங்களுடைய கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா போட்டியிட வேண்டுமென பலரும் விருப்பங்களையும் கொண்டிருக்கின்றார்கள். 

இது பற்றிய ஆய்வுகள் கருத்துக்கள் வெளிவந்தமிண்ணமிருப்பதும் யாவரும் அறிந்ததே. இது தொடர்பான விடயங்கள் இருக்கையில் பல்வேறு கருத்துக்கள் வரலாம் ஐனநாயக முறைப்படி கட்சிகள் தங்களுடைய கருத்தக்களை முன்வைக்கக் கூடும். அதற்கு நாங்கள் எதிர் அல்ல. ஆனால் மாகாண சபைக்கான தேர்தல்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. 

மாகாண சபை எந்த தேர்தல் முறையில் நடாத்தப்படும். ஏந்த திகதியில் நடத்தப்படுமென்பது கூட கேள்விக்குறியாக இருக்கிறது. ஆயினும் இந்த வருடத்தில் நடாத்தப்படுமென அரசியல் தலைவர்கள் எல்லாம் ஆளுக்கால் மாறி அறிக்கைகளை விட்டாலும் கூட இந்த வருட இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு. 

அனேகமாக அடுத்த வருடத்தில் நடைபெற இருக்கின்ற மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சூழ்நிலைகளில் மாவை சேனாதிராசாவின் பங்களிப்பு அவருடைய கடந்த கால அரசியல் வாழக்கை, மூப்பு முத்த தலைவர் என்ற வகையில் அவரை எல்லோரும் விரும்புகிறார்கள். அந்த விருப்பத்திற்கு யாரும் மறுப்புத் தெரிவித்ததாகவும் இல்லை. 

இருந்தாலும் காலம் பதில் சொல்லும். ஏனைய கட்சிகளது கருத்துக்களும் ஐனநாயக ரீதியாக எடுக்கப்பட்டு எல்லோருடைய கருத்துக்களினடிப்படையில் சுமூகமானதொரு முடிவே எட்டப்படும். இதிலே யாருக்கும் பாதகங்கள் இருக்காது. தேர்தல் அவிக்கப்படட்டும். அவ்வாறு தேர்தல் வருகின்ற போது நல்ல முடிவுகளை நாங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றார்.