பாடசாலை ஒன்றில் நடந்த பல லட்சம் ரூபாய் மோசடி! பல வருட இழுபறி விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாம்...

ஆசிரியர் - Editor I
பாடசாலை ஒன்றில் நடந்த பல லட்சம் ரூபாய் மோசடி! பல வருட இழுபறி விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாம்...

அதிபர் ஒருவரினால் 2016 - தொடக்கம் 2020ம் ஆண்டுவரை பல மில்லியன் ரூபாய் அரச நிதி மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கின்றது. 

வவுனியா மாவட்டத்திலுள் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மேற்படி மோசடி சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த மோசடி சம்பவத்துடன் அப்போதைய வலய கல்வி பணிப்பாளர் ஒருவருக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகின்றது. 

மத்திய கணக்காய்வுத் திணைக்கள அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பாக  பாடசாலை மற்றும் அதனுடன் தொடர்புடைய மாகாண தேசிய நிறுவனங்கள் இறுதிக்கட்ட விசாரணைப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அறியவருகிறது.

2019ம் ஆண்டில் பாடசாலையின் அதிபருக்கு எதிராக தேசிய கணக்காய்வு திணைக்களத்தினால் 10 கணக்காய்வு விசாரணைகளைகள் பல மில்லியன் அரச பொது நிதி குறித்தஅதிபரால் ஊழலுக்கு உள்ளாமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனாலும் குறித்த அதிபரைப் பாதுகாப்பதில் அப்போதைய வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் தீவிர அக்கறை காடடியதாக பாடசாலை சமூகம் குற்றச்சாட்டை முன்வைத்தது.

காரணம் பாடசாலையின் ஊழலில் குறித்த வலயக்கல்விப் பணிப்பாளரும் பங்கெடுத்திருந்தமை வெளிச்சத்துக்கு வந்தது. குறித்த பாடசாலையின் மாணவர்களுக்கான சத்துணவு விநியோகத்தில்

வலய கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடனேயே பல மில்லியன் அரச பொது நிதி ஊழலுக்கும் உள்ளானமை கணக்காய்வுத் திணைக்களத்தின் 51ம் இலக்க கணக்காய்வு விசாரணையின் மூலம் உறுதி செய்யப்பட்டது.

மேற்படி கணக்காய்வு விசாரணையின்படி அண்ணளவாக 100 மில்லியனுக்கு மேற்பட்ட நிதி குறித்த வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடன் அதிபரால் தனி நபரின் பெயருக்கு எழுதப்பட்டு கையாடல் செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

அதுமட்டுமன்றி 61ம் இலக்க கணக்காய்வு விசாரணை அறிக்கையின்படி செலவினங்கள் தொடர்பாக எந்தவித ஆதாரங்களுமின்றி அண்ணளவாக ஒருகோடிக்கு மேற்பட்ட நிதி அதிபரால் மோசடி செய்யப்பட்டமை அம்பலத்துக்கு வந்துள்ளது.

அத்துடன் பாடசாலைக்கு மதில் அமைக்கும் பெயரில் நடைபெற்ற முறைகேடு விடுதி புனரமைப்பின் பெயரில் நடைபெற்ற பல மில்லியன் ஊழல் உறுதிப் படுத்தப்படாத செவினம் அண்ணளவாக ஒரு கோடிக்கு மேல் என அறியப்படுகிறது. 

கணக்காய்வு விசாரனைகள் இறுதிக்கட்டத்தை அண்மித்த நிலையில் ஊழல்கள் தொடர்பாக அப்போதைய வலயக்கல்விப் பணிப்பாளர் எந்தவித ஆரம்பக்கட்ட விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை. 

அது மட்டுமல்லாது வவுனியா வலயத்தின் ஒரு அறையின் திறப்பு இதுவரை இவரால் கையளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் உள்ளது. ஆகவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் மீது 

பக்க சார்பில்லாத விசாரணை மேற்கொள்ளப்படுவதோடு விரைவில் விசாரணை அறிக்கை வெளியீட்டு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்படுகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு