100 ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம்!! -புதிய சாதனை படைத்த வார்னர்-

ஆசிரியர் - Editor II
100 ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம்!! -புதிய சாதனை படைத்த வார்னர்-

டேவிட் வார்னர் தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இவ்விரு அணிகள் இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமானது. இந்த டெஸ்ட் போட்டி அவுஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு 100 ஆவது டெஸ்ட் ஆகும். இதில் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 189 ஆட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை அவுஸ்திரேலிய அணி ஆடி வருகிறது. இதில் அவுஸ்திரேலிய அணி தரப்பில் கவாஜா ஒரு ஓட்டத்துடனும்,  லபுஸ்சேன் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வார்னர், ஸ்மித் இணை நேர்த்தியாக ஆடி ஓட்டங்களை குவித்து வந்தனர். 

இதில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் வார்னர் தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் தனது 25 ஆவது சதத்தை அடித்து அசத்தினார். மேலும், அவுஸ்திரேலியா அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,000 ஓட்டங்களை கடந்த 8 ஆவது அவுஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்தார். 

மேற்கொண்டு தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய டேவிட் வார்னர் சத்ததை இரட்டை சதமான மாற்றினார். இதன் மூலம் தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தி உள்ளார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த வார்னர் அதை இரட்டை சதமாக மாற்றி அசத்தினார். 

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 3 ஆவது இரட்டை சதத்தை வார்னர் அடித்துள்ளார். மேலும், ஜோ ரூட்டுக்குப் பின் தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வார்னர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு