அவதார்- 2 உலக அளவில் 7000 கோடி வசூலை குவித்து சாதனை!!

ஆசிரியர் - Editor II
அவதார்- 2 உலக அளவில் 7000 கோடி வசூலை குவித்து சாதனை!!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 உலகம் முழுவதும் வெளியாகி வசூலிலும் சாதனை படைத்து, 3 ஒஸ்கார் விருதுகளை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பின் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார் தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் தயாராகி ஆங்கிலம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் கடந்த 16 ஆம் திகதி வெளியானது. 

அவதார்: தி வே ஆப் வாட்டர், சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படமான அவதாரின் தொடர்ச்சியாகும். அவதார் 2 இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை வரை இந்திய மதிப்பில் 7 ஆயிரம் கோடி வசூலித்துள்ளது. 

இந்தியாவில் அவதார்: தி வே ஆப் வாட்டர் 10 நாட்களில் 300 கோடியைத் தாண்டியது. வரும் நாட்களில் நாட்டில் 500 கோடியை எதிர்பார்க்கப்படுகிறது. அவதார்: தி வே ஆப் வாட்டர்படம் தற்போது உலகம் முழுவதும் ஒரு பில்லியன் டொலர்களை நோக்கி முன்னேறி வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு