SuperTopAds

மெஸ்சிக்கு உபாதை!! -அர்ஜென்டினா ரசிகர்களுக்கு சோகம்-

ஆசிரியர் - Editor II
மெஸ்சிக்கு உபாதை!! -அர்ஜென்டினா ரசிகர்களுக்கு சோகம்-

குரோசியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். அதன்பின் அல்வாரெஸ் கோல் அடிக்க துணை புரிந்தார். இந்த போட்டியின்போது மெஸ்சி தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

100 சதவீதம் உடற்தகுதியுடன் இல்லையாம். இருந்தாலும் விளையாடுகிறேன் என மெஸ்சி தன்னம்பிக்கையுடன் விளையாடினாராம். தற்போது இடது காலில் தசைப்பிடிப்பு (hamstring) ஏற்பட்டதன் காரணமாக நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். 

இதனால் அர்ஜென்டினா அணி மெஸ்சி காயத்தால் கவலையடைந்துள்ளது. ஒரு வேளை நாளைமறுதினம் பிரான்ஸ்க்கு எதிரான இறுதிப் போட்டியில் மெஸ்சி 100 சதவீத உடற்குதியுடன் விளையாடவில்லை என்றால், அது அர்ஜென்டினாவுக்கு மிகப்பெரிய இழப்பாகும் என்பதில் சந்தேகமில்லை. டி மரியா அரையிறுதியில் காயம் காரணமாக விளையாடவில்லை. 

தற்போது அவர் உடற்தகுதி பெற்று விட்டதால் இறுதிப் போட்டியில விளையாட வாய்ப்புள்ளது. இந்த உலகக் கோப்பையில் மெஸ்சி 5 கோல் அடித்துள்ளார். 3 கோல் அடிக்க துணை புரிந்துள்ளார். அவருடன் எம்பாப்வேவும் 5 கோல் அடித்துள்ளார். இருவரும் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.