இரண்டாவது அரையிறுதி இன்று!! பிரான்சின் அதிரடியை சமாளிக்குமா மொராக்கோ?

ஆசிரியர் - Editor II
இரண்டாவது அரையிறுதி இன்று!! பிரான்சின் அதிரடியை சமாளிக்குமா மொராக்கோ?

இந்த உலகக் கோப்பையில் கணிக்க முடியாத ஒரு அணியாக அரைஇறுதி வரை நுழைந்து ஆச்சரியப்படுத்தியுள்ள மொராக்கோ இன்று நடைபெறும் இரண்டாவது அரைஇறுதிப் போட்டியில் பிரான்சை எதிர்த்தாடவுள்ளது. 

இவ்விரு அணிகளும் இதுவரை 5 நட்புறவு ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 3 இல் பிரான்சும், ஒன்றில் மொராக்கோவும் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் சமனிலையில் முடிந்தது. உலகக் கோப்பையில் இரு அணிகளும் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு இப் போட்டி ஆரம்பமாகும். உலகத் தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள மொராக்கோ, தாக்குதல் பாணியை கையாளும் பிரான்சுக்கும் அதிர்ச்சி அளிக்குமா அல்லது மொராக்கோவின் தடுப்பு அரணை உடைத்து பிரான்ஸ் 4 ஆவது முறையாக இறுதிசுற்றுக்குள் அடியெடுத்து வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு