இயக்கச்சி பண்ணை ஒன்றில் பாதுகாப்பற்ற தொங்குபாலம் அறுந்து விழுந்ததில் பெண் ஒருவர் படுகாயம்!

ஆசிரியர் - Editor I
இயக்கச்சி பண்ணை ஒன்றில் பாதுகாப்பற்ற தொங்குபாலம் அறுந்து விழுந்ததில் பெண் ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் உள்ள தனியார் பண்ணையில் அமைக்கப்பட்டிருக்கும் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் குடும்ப பெண் ஒருவர் கால் முறிந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இயக்கச்சி ஆழியவளை வீதியில் அமைந்துள்ள குறித்த பண்ணைக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.இங்கு பொழுது போக்கு, விளையாட்டு தளங்கள் காணப்படுகின்றது. 

இதனால் நாளாந்தம் நூற்றுக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர். இங்கு காணப்படும் பாதுகாப்பற்ற தொங்கு பாலத்தில் இருந்து கடந்த காலத்திலும் பலர் வீழ்ந்து படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இதனை குறித்த நிருவாகத்தினர் சீர்செய்யாது தொடர்ந்தும் நடாத்தி வருகின்றனர். இன்று வவுனியாவில் இருந்து வருகை தந்திருந்த இளங்குடும்பத்தினர் தொங்கு பாலத்தினூடா பயணித்துள்ளனர். 

இதன் போது தொங்கு பாலம் ஆட்டம் கண்டு துள்ளி எழுந்துள்ளது. இதனால் இப் பெண் தூக்கி வெளியே வீசப்பட்டுள்ளார், தூக்கி வீசப்பட்ட பெண்னின் காலில் உடைவு ஏற்பட்டுள்ளது. 

விபத்துக்குள்ளான பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு போக்குவரத்து வாகன வசதிகள் இல்லை, இதனால் 45 நிமிட தாமதங்களின் பின் 1990 அவச நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு 

அதன் மூலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு