ரெலோவின் முடிவில் மாற்றமில்லை.

ஆசிரியர் - Editor I
ரெலோவின் முடிவில் மாற்றமில்லை.

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பாக ரெ லோ அமைப்பின் முடிவுகளில் மாற்றம் எது வுமில்லை என கூறியிருக்கும் அமைப்பின் செயலாளர் என்.சிறீகாந்தா, எம்மை அரசி யல் ஏமாளிகளாக கருத கூடாது. கருதினா ல் அதற்கான விளைவுகளை அவர்களே பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறியுள் ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பாக ரெ லோ அமைப்பின் 2ம் கட்ட கூட்டம் இன்று யாழ்.கொட்டடி பகுதியில் நடைபெற்றிருந்த து. இந்த கூட்டத்தின் நிறைவில் ஊடகங்க ளுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

நேற்று தலமை குழுவினால் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் சில விடயங்களை விவாதித்துள்ளோம். மேலும் இன்றைய கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைள் தொடர்பாகவும் பேசியுள் ளோம். தமிழரசு கட்சி எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளில் குறிப்பாக நேற்று பிற்பகல் ந

டைபெற்ற பேச்சுவார்த்தையின்போது காட்டிய நிலைப்பாட்டின் விளைவாகவே இந்த நிலை உண் டாகியுள்ளது. தமிழரசு கட்சி கூட்டமைப்பின் மற்றய அங்கத்துவ கட்சிகளான புளொட், ரெலோ என்பனவற்றின் கோரிக்கைள் தொடர்பில் காட்டிய போக்கினை எங்களால் சகித்து கொள்ள முடி யாது. குறிப்பாக மட்டக்களப்பு, முல்லைத்தீவு சம்மந்தமாக நாங்கள் வைத்திருந்த நியாயமான கோ

ரிக்கைகளை மலினப்படுத்துவதாகவே தமிழரசு கட்சியின் மாவட்டங்களை சேர்ந்த தமிழரசு கட்சியி ன் 2ம் கட்ட தலைவர்களின் நிலைப்பாடு இருந்தது. இந்த பேச்சுவார்த்தையில் எங்கள் கட்சி பூர ணமான ஒத்துழைப்பை வழங்கினோம். திருகோணமலை, கிளிநொச்சி தொடர்பிலும் நாங்கள் அனு சரணையான போக்கினை வெளிப்படுத்தியிருந்தோம். இருந்தும் மட்டக்களப்பு முல்லைத்தீவு

மாவட்டங்களில் அநீதியான நிலைப்பாடு, எடுத்தெறியும் போக்கு எங்களுக்கு சில யதார்த்தபூர்வமா ன உண்மைகளை கசப்பாக உணர்த்தின. பொறுமைக்கும் எல்லை உண்டு. பல சந்தர்ப்பங்களில் வி மர்சனங்களை சந்தித்தபோதும் உள்ளுராட்சி சபை தேர்லை பொறுத்தளவில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு எங்கள் கோரிக்கைகளை மட்டுப்படுத்தினோம். இருந்து

ம் சில அடிப்படை கோரிக்கைளில் அழுத்தம் திருத்தமாக கேட்டிருந்தோம். மட்டக்களப்பு, முல்i லத்தீவு பிரதேசங்கள் தொடர்பில் முடிவு எடுக்க முடியாத நிலைக்கு தமிழரசு கட்சி பொறுப்பே ற்கவேண்டும். இந்த நிலையிலேயே தீர்மானத்தை நாங்கள் எடுக்கவேண்டியிருந்தது. ஏகமனதா க எதிர்வரும் தேர்தலை தமிழரசு கட்சியுடன் சேர்ந்து சந்திப்பதில்லை என்பது அந்த தீர்மானம் அ

ந்த தீர்மானத்தின் அடிப்படையில் இன்று நாங்கள் தமிழ்தேசிய நீரோட்டத்தில் சேர்ந்திரு க்கும் சில கட்சிகளுடன் கருத்து பரிமாற்றங்களை செய்துள்ளோம். அவர்களுக்கு எங்கள் நிலை ப்பாட்டை சொல்லி, அவர்களுடைய அவதானத்தையும் நாங்கள் பெற்றுள்ளோம். தமிழ்தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளுடன் ஒற்றுமையுடன் இணைந்து செயற்பட தயார். அதற்காக எங்

எங்களை அரசியல் ஏமாளிகள் என நினைத்தால் அதற்கான பொறுப்பை அவர்களே பொறுப் பேற்கவேண்டும். ஈ.பி.ஆர்.எல்.எவ். தமிழர் விடுதலை கூட்டணி, புளொட், பேச்சு நடத்தியுள்ளோம். நாளை தமிழ்தேசிய மக்கள் முன்னணியுடனும் பேச்சு நடத்தவுள்ளோம். இந்த பின்ன ணியில் அடுத்துவரும் நாட்களி ல் நாங்கள் எங்கள் நேற்ய முடிவின் அடிப்படையில் சில திட்டவட்ட

மாக நடவடிக்கைகளை எடுப்போம். அவ்வப்போது தலமைகுழு கூடும். அரசியல் குழுவும் கூடும். இந்த நிலமை சவாலான விடய ஷம் அல்ல. ஆனால் குறுகிய அரசியல் நலன்களுக்காக தமிழ் தேசிய ஒற்றுமை என்பது விளையாட்டுப் பந்தாக மாறிவிட கூடாது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு