SuperTopAds

4 லட்சத்து 81 ஆயிரம் செலவில் ஓய்வுபெற்ற அதிபருக்கு மணிவிழா! தேவைதானா? எழுந்துள்ள சர்ச்சை..

ஆசிரியர் - Editor I
4 லட்சத்து 81 ஆயிரம் செலவில் ஓய்வுபெற்ற அதிபருக்கு மணிவிழா! தேவைதானா? எழுந்துள்ள சர்ச்சை..

ஓய்வுபெற்ற அதிபர் ஒருவருக்கு சுமார் 4 லட்சத்து 81 ஆயிரத்து 650 ரூபாய் செலவில் மணிவிழா நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளது. 

பாடசாலை நலன்புரி சங்கம் அல்லது ஆசிரியர் நலன்புரி சங்கம், பாடசாலை வங்கி கணக்கு ஊடாக மேற்படி 4 லட்சத்து 81 ஆயிரம் சேகரிக்கப்பட்டிருக்கவில்லை.

அதனை ஆசிரியர் ஒருவர் தன்னிச்சையாக செலவிட்டிருக்கின்றார். மேலும் நிகழ்வுக்கான பணம் பழைய மாணவர்களிடமும் சேகரிக்கப்பட்டுள்ளதுடன்,

சம்பவம் தொடர்பாக பழைய மாணவர் சங்கம் எழுத்துமூலம் பாடசாலையிடம் கேள்வி எழுப்பியிருக்கின்றது. 

இந்நிகழ்வு தொடர்பாக பாடசாலை நலன் விரும்பிகள் கூறுகையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி காலத்தில், 

பல லட்சங்களை செலவிட்டு ஒரு நிகழ்வு அவசியமானதா? மேலும் பாடசாலையில் நிதி கையாளுகைகளுக்கான கட்டமைப்புக்கள் உள்ள நிலையில் 

தனி நபர்களினால் பணம் சேகரிக்கப்பட்டு அது பாடசாலையின் பெயரில் பாடசாலைக்குள் அதே தனிநபர்களால் பயன்படுத்துவது எவ்வாறு?

எனவே இந்த விடயம் தொடர்பாக மாகாண கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுள்ளனர்.