புதிதாக நியமனம்பெற்ற 24 கிராமசேவகர்கள் தம் பதவிகளை பொறுப்பேற்கவில்லை..

ஆசிரியர் - Editor I
புதிதாக நியமனம்பெற்ற 24 கிராமசேவகர்கள் தம் பதவிகளை பொறுப்பேற்கவில்லை..

வடக்கு மாகாணத்தில்  அண்மையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட  196 கிராம சேவகர்களில் 24 பேர் தமது கடமைகளை பொறுப்பேற்கவில்லை என மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிராம சேவகர்கள் வெற்றிடத்தினை நிரப்பும் வகையில் 2016ம் ஆண்டு விண்ணப்பம் கோரப்பட்டு அதற்கமை 2017ம் ஆண்டில் எழுத்துப் பரீட்சையும் இடம்பெற்றிருந்தது.  

இருப்பினும் அவர்களிற்கான நேர்முகத் தேர்வு நீண்டகாலமாகவே இழுபட்ட நிலையில் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் நேர்முகத் தேர்வு இடம்பெற்றது. இதன் அடிப்படையில் அண்மையில்  மாவட்ட ரீதியில் நியமனம் வழங்கப்பட்டது. 

இந்த நிலையில் வடக்கின் 5 மாவட்டத்திலும் தற்போது 285 கிராம சேவகர்களிற்கான பதவிகள்  வெற்றிடமாகவுள்ள நிலையில் 196பேர் மட்டுமே நியமிக்கப்பட்டனர். அவ்வாறு நியமிக்கப்பட்ட 196 கிராமசேவகர்களில் 25 பேர் தமது கடமையை பொறுப்பேற்க முன்வரவில்லை. 

அதன் பிரகாரம்   யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட  77 பேரில்  62 பேர் மட்டுமே கடமையை பொறுப்பேற்றுள்ளனர்.  மன்னார் மாவட்டத்திற்கு 28 கிராம சேவகர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் இருவர் கடமையை பொறுப்பேற்கவில்லை.    

முல்லைத்தீவு மாவட்டத்தில்   43 பேர் நியமிக்கப்பட்டபோதும் 38 பேர் மட்டுமே  கடமையை பொறுப்பேற்றுள்ளனர். இதேபோன்று வவுனியா மாவட்டத்தில்    30பேர் பேர் நியமிக்கப்பட்ட நிலையில்   29 பேர் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர். 

இதேபோன்று  கிளிநொச்சி மாவட்டத்தினைப் பொறுத்த மட்டில்  18  பேர் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது 17 பேர் கடமையை பொறுப்பேற்றுள்ளனர்  என மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 285 கிராம சேவகர்கள் வெற்றிடத்திற்கு கு 196பேர் நியமிக்கப்பட்ட நிலையில் 172 பேர் மட்டுமே கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.  

வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் 113 கிராம சேவகர்களிற்கான பதவிகள் வெற்றிடமாகவே உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு