SuperTopAds

வழித்தட அனுமதியில்லாமையால் பேருந்தை கைப்பற்றிய மாங்குளம் பொலிஸாா், வீதியில் அந்தாித்த பயணிகள்..

ஆசிரியர் - Editor I
வழித்தட அனுமதியில்லாமையால் பேருந்தை கைப்பற்றிய மாங்குளம் பொலிஸாா், வீதியில் அந்தாித்த பயணிகள்..

யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேரூந்திடம் வழித்தட அனுமதியில்லை என்பதன் அடிப்படையில் ஏ9 வீதியில் மாங்குளம் பொலிசார் கைப்பற்றி முறைப்பாட்டைப் பதிவு செய்தனர்.

யாழில் இருந்து நேற்றைய தினம் பகல்வேளையில் கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேரூந்திற்கு வழித்தட அனுமதி இல்லை என்றதன் அடிப்படையிலேயே மாங்குளம் பொலிசார் வீதிச் சோதனையின்போது குறித்த பேரூந்தினை கைப்பற்றினர்.
இவ்வாறு கைப்பற்றிய பயணிகள் பேரூந்தில் பயணித்த பேரூந்து மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதனால் பயணிகள் வீதியில் அந்தரித்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் பேரூந்தில் பயணித்த பயணி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் ,

எந்தப் பேரூந்து அனுமதியுடன் ஓடுகின்றது , எந்தப் பேரூந்து அனுமதி இன்றி ஓடுகின்றது என்பதனை பயணிகள் அறிய முடியாது. அவ்வாறு அனுமதி அற்ற பேரூந்துகளை பிடிப்பது பொலிசாரின் கடமை. 

அப்படியானால் பேரூந்து புறப்படும் இடத்திலேயே இந்தச் சோதனைகளை மேற்கொண்டு பயணத்தை இலகு படுத்த வேண்டியதும் இதே பொலிசாரின் கடமை.

அவ்வாறு மேற்கொள்ளாது நாம் பயணத்தை ஆரம்பித்து 90 கிலோ மீற்றர் தாண்டிய நிலையில் நடுவீதியில் இறக்கிவிடுவதால் ஏற்படும் இடையூறுகளிற்கு யார் பதில் கூறுவது. என்றார்.